1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.BZ

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.BZ

3
00:00:29,196 --> 00:00:31,573
ஜான் டிரவோல்டாவின் படைப்பு

4
00:01:53,030 --> 00:01:55,991
ஜான் டிரவோல்டாவின் புத்தகம் ஒன்றைத் தழுவியது

5
00:02:00,245 --> 00:02:03,081
இயக்கம்
ஜான் டிரவோல்டா

6
00:02:06,001 --> 00:02:07,628
டிசம்பர் 28, 1962

7
00:02:07,711 --> 00:02:09,463
ஐடில்வைல்ட் விமான நிலையம், நியூ யார்க்

8
00:02:16,094 --> 00:02:17,513
அப்போது நள்ளிரவு நேரம்,

9
00:02:17,596 --> 00:02:19,181
விமான நிலையத்தினுள் மிகச் சொற்பமாகவே
மக்கள் இருந்தனர்.

10
00:02:24,561 --> 00:02:27,898
வரவிருக்கும் "த V.I.P.s" என்னும் திரைப்படத்தில்,
லிஸ் டெய்லரின் புகைப்படம் ஒன்றை

11
00:02:27,981 --> 00:02:29,399
அம்மா பார்த்தாள்.

12
00:02:29,483 --> 00:02:31,360
அவளுக்கு அதே போன்ற
ஒரு கோட்டை வாங்க வேண்டும் என்ற ஆசை.

13
00:02:31,443 --> 00:02:33,862
ஆனால் அவள் தன்னுடைய கோட்டை, பணக்கார மக்கள்

14
00:02:33,946 --> 00:02:36,740
பயன்படுத்திய ஆடைகளை விற்கும்
தேவாலய விற்பனையில் வாங்கினார்.

15
00:02:37,449 --> 00:02:39,451
- குட்பை, பாட்டி.
- குட்பை, செல்லம்.

16
00:02:39,535 --> 00:02:41,161
- உம்மா.
- உங்களை மிஸ் பண்ணுவேன்.

17
00:02:41,787 --> 00:02:42,788
குட்பை, மா.

18
00:02:42,871 --> 00:02:43,872
குட்பை, செல்லம்.

19
00:02:44,540 --> 00:02:46,458
டிரான்ஸ் வர்ல்ட் ஏர்லைன்ஸிற்கு இறுதி அழைப்பு,

20
00:02:46,542 --> 00:02:50,963
ஃப்ளைட் 700 ராயல் அம்பாஸிடர்
லண்டனுக்கான சூப்பர் ஜெட் சர்வீஸ்.

21
00:02:51,046 --> 00:02:52,965
போர்டிங் இப்போது கேட் 3-ல்.

22
00:02:53,048 --> 00:02:54,049
அனைவரும் விமானத்தில் ஏறவும்.

23
00:02:54,132 --> 00:02:57,594
அறிவிப்பைக் கூறும் குரலில்
ஒரு நவீனத்தன்மை தோன்றியது.

24
00:02:57,678 --> 00:03:00,055
அது ஒரு நடிகை போன்று,
யாரோ அழகாய் உள்ள ஒருவருக்குச் சொந்தமானது

25
00:03:00,138 --> 00:03:01,932
என்று நினைத்தேன்.

26
00:03:02,516 --> 00:03:05,269
நான் மேரிலின் மன்ரோ போல நடந்துக்கிட்டா,

27
00:03:05,352 --> 00:03:07,688
டிக்கெட் ஏஜென்ட் நம்மள
முதல் வகுப்பில போடலாம்.

28
00:03:08,397 --> 00:03:10,858
அப்படிச் சென்றால்
டிரிங்க்ஸ் அனைத்தும் இலவசம்

29
00:03:10,941 --> 00:03:12,526
என்றும் கூறினாள்.

30
00:03:12,609 --> 00:03:16,738
பறக்கும் உற்சாகத்தில் அதைப் பற்றி எல்லாம்
நான் அக்கறைக் கொள்ளவில்லை.

31
00:03:18,073 --> 00:03:20,617
டிரான்ஸ் வர்ல்ட் ஏர்லைன்ஸ், ஃப்ளைட் 393

32
00:03:20,701 --> 00:03:23,036
சூப்பர் கான்ஸ்டெலேஷன் சேவை, பிட்ஸ்பர்க்,

33
00:03:23,120 --> 00:03:25,539
டேடன், சிகாகோ, கேன்சஸ் சிட்டி,

34
00:03:25,622 --> 00:03:27,249
டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சலஸுக்குச் செல்வது.

35
00:03:27,332 --> 00:03:29,084
இப்போது போர்டிங் மேற்கு ஆர்கேடில்.

36
00:03:29,168 --> 00:03:30,752
அனைவரும் விமானத்தில் ஏறவும்.

37
00:03:30,836 --> 00:03:32,421
நான் இது வரை உணர்ந்திராத உற்சாகம்

38
00:03:32,504 --> 00:03:34,590
என் உடல் முழுவதும் பரவியது.

39
00:03:34,673 --> 00:03:38,385
இன்னும் சில நிமிடங்களுக்குள் நான் வானில்
முதல் முறையாக பறக்கப் போகிறேன் என்பதை அறிவது

40
00:03:38,468 --> 00:03:39,928
வீட்டிருகில் சிறுவர்களோடு
டாக்டர் விளையாடுவது உட்பட,

41
00:03:40,012 --> 00:03:42,556
எதற்கும் நிகராக இருக்கவில்லை.

42
00:03:42,639 --> 00:03:44,766
அது ஓர் எட்டு வயது சிறுவனுக்குப்
பெரிய காரியமாக இருந்தது.

43
00:03:47,144 --> 00:03:48,979
அன்றிரவு நடந்த அனைத்தும் எனக்கு
ஞாபகம் இருக்கிறது.

44
00:03:49,479 --> 00:03:51,523
விமான நிலையத்திற்குள் விளக்குகள்
மந்தமாக இருந்தது,

45
00:03:51,607 --> 00:03:53,358
விமான நிறுவனத்தின் சின்னம் எல்லாமே.

46
00:03:53,442 --> 00:03:56,320
அப்படியே மேற்கு ஆர்கேடில் உள்ள கேட்டிற்கு
வேகமாகச் சென்றோம்.

47
00:03:56,403 --> 00:03:58,322
என் அம்மா கூட உற்சாகமாக இருந்தது போல் தோன்றியது,

48
00:03:58,405 --> 00:04:00,616
ஆனால் அது நிச்சயம் வேறு காரணங்களுக்காக.

49
00:04:00,699 --> 00:04:03,619
ஒருவேளை அவளுக்குக் கிடைக்கக் கூடிய
இலவச டிரிங்க்குகள் அல்லது

50
00:04:03,702 --> 00:04:06,413
விமானத்தில் ஓர் அழகான ஆணை சந்திக்கும்
சாத்தியத்தால் இருக்கலாம்.

51
00:04:07,039 --> 00:04:10,834
என் அம்மாவிற்கு 49 வயது இருக்கும்,
வசீகரமானவளும் கூட.

52
00:04:10,918 --> 00:04:12,794
நீல கண்கள், அருமையான முடி,

53
00:04:12,878 --> 00:04:15,380
அவள் வயதுக்கு நல்ல உடற்கட்டு,
அவள் சொன்னது தான்.

54
00:04:16,005 --> 00:04:19,468
நான் மட்டும் காலம் தாழ்ந்து பிறந்திருக்காவிட்டால்,
அவள் இன்னும் நல்ல உடற்கட்டுடன் இருந்திருப்பாள்.

55
00:04:20,010 --> 00:04:22,804
வயிறு சிறிது தள்ளியிருப்பதை நிறைய ஆண்கள்
கண்டுக் கொள்வதில்லை.

56
00:04:22,888 --> 00:04:25,057
சிலருக்கு அது செக்ஸியாக தோன்றுவதாக,
அவள் நினைத்தாள்.

57
00:04:25,724 --> 00:04:28,185
அவள் ஒருவேளை, இந்த விமானத்தின் கேப்டன்

58
00:04:28,268 --> 00:04:30,437
அல்லது வேறொருவருடன் காதலில் விழலாம்.

59
00:04:31,396 --> 00:04:34,399
ஐடில்வைல்ட் விமான நிலையம் வழியாக
வேகமாகச் செல்வது வேடிக்கையாக இருந்தது.

60
00:04:34,483 --> 00:04:37,778
இந்த முறை நாங்கள் உண்மையிலேயே, நிஜமாகவே
பறக்கப் போகிறோம் என்று என்னால் நம்ப முடியவில்லை.

61
00:04:39,571 --> 00:04:42,908
பெரும்பாலும் நாங்கள் விமான நிலையம் வருவது
மற்றவர்களை வழியனுப்புவதற்காகத் தான் இருக்கும்.

62
00:04:42,991 --> 00:04:45,244
ஒரு முறை, கோடை நிகழ்வில், என் அம்மா தான் நடித்த

63
00:04:45,327 --> 00:04:47,704
ஒரு நாடகத்தில் பங்கேற்பதற்காக
விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது.

64
00:04:47,788 --> 00:04:50,207
ஆனால் இந்த முறை நானும் செல்ல வாய்ப்பு கிடைத்தது.

65
00:05:04,930 --> 00:05:06,598
எல்லாமே கனவு போல் தோன்றியது.

66
00:05:07,099 --> 00:05:08,684
நான் மிகுந்த பதட்டத்துடன் இருந்தேன்.

67
00:05:11,144 --> 00:05:13,480
எல்லாமே மெதுவாக நகர்வது போல இருந்தது.

68
00:05:14,314 --> 00:05:15,941
அவள் அழகாக இருந்தாள்.

69
00:05:16,024 --> 00:05:19,319
வெள்ளி மற்றும் வெள்ளை நிறத்தில்,
எடுத்துக்கொடுக்கும் இரண்டு சிவப்பு கோடுகள்,

70
00:05:19,403 --> 00:05:22,364
பக்கவாட்டில் TWA என்று அச்சிடப்பட்ட எழுத்துகள்.

71
00:05:22,948 --> 00:05:24,116
ஓ, என்னவொரு காட்சி.

72
00:05:24,741 --> 00:05:29,246
குளிர் காற்று என் முகத்தில் வீசியது,
ஆனால் அது என் முதல் காதலுக்கு இடைஞ்சலாக இல்ல.

73
00:05:31,790 --> 00:05:34,877
பார்க்க சாந்தமாக இருந்தது,
திடமாகவும், வலிமையாகவும் தோன்றியது.

74
00:05:36,587 --> 00:05:39,089
நான் ஒரு போதும் மறக்காத
ஒரு புது அனுபவத்தை இது துவக்கும்.

75
00:05:42,426 --> 00:05:44,928
விமானத்தில் ஏறுவதற்காக நாங்கள்
படிகளில் ஏறிய போது,

76
00:05:45,012 --> 00:05:46,972
விசித்திரமான ஒன்றைப் பார்த்தேன்.

77
00:05:47,055 --> 00:05:49,057
எங்களோடு பல பேர் வரவில்லை.

78
00:05:49,141 --> 00:05:50,475
வெகு சிலரே இருந்தனர்.

79
00:05:50,559 --> 00:05:54,062
பின்னர் அந்த விமானம் எனக்கும் என் அம்மாவுக்கும்
மட்டுமானதாக நான் பாவித்துக்கொண்டேன்,

80
00:05:54,146 --> 00:05:55,355
அது தனித்துவமானதல்லவா?

81
00:06:01,403 --> 00:06:03,822
வெல்கம். உள்ள கொஞ்சம் கதகதப்பாகத் தான் இருக்கு.

82
00:06:03,906 --> 00:06:06,658
படியின் மேல இருந்த விமான பணிப்பெண்
உயரமாக மெலிந்து இருந்தாள்,

83
00:06:06,742 --> 00:06:08,368
இதமான புன்னகையைக் கொண்டிருந்தாள்.

84
00:06:42,277 --> 00:06:44,363
உங்களுக்கென ஒரு அவசரகால மேப்பும்
எங்க கிட்ட இருக்கு.

85
00:06:44,446 --> 00:06:46,323
அவளைக் குறித்து
ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது.

86
00:06:46,406 --> 00:06:47,950
எது என்று குறிப்பிட்டு சொல்லக் கடினமான ஒன்று.

87
00:06:48,700 --> 00:06:51,161
பின்னர் என் அம்மா அவளோடு நன்றாகப் பழகினாள்.

88
00:06:51,245 --> 00:06:52,579
ஏறக்குறைய சிறந்த நண்பர்களாயினர்.

89
00:06:52,663 --> 00:06:55,666
மற்றவர்களிடமிருந்து லிஸ் ஏன் பார்க்க
வித்தியாசமாகத் தோன்றினாள் என்று அவளிடம் கேட்டேன்,

90
00:06:55,749 --> 00:06:58,502
முகாம் சிறையில் இருந்ததிலிருந்து,
அவள் வாழ்க்கையில் புரிதல்,

91
00:06:58,585 --> 00:07:01,463
உண்மையான சோகம் இரண்டின் காரணமாக
அப்படி இருப்பதாக என் அம்மா கூறினாள்.

92
00:07:02,798 --> 00:07:05,342
எஞ்சின்கள் ஒவ்வொன்றாகத்
துவங்கியதும்,

93
00:07:05,968 --> 00:07:09,346
பெரிதாக, மென்மையாக, சௌகரியமாகத்
தோன்றிய இருக்கை ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன்.

94
00:07:09,930 --> 00:07:11,431
அவற்றின் சத்தம் எனக்குக் கேட்கவே இல்லை.

95
00:07:11,974 --> 00:07:16,353
பெரிய புரொப்பலர்கள் சுழல,
பின்புற எக்சாஸ்ட் வழியாக தீப்பிழம்புகள் வெளியேறின.

96
00:07:17,104 --> 00:07:18,522
இது ஜெட் யுகம் என்று எனக்குத் தெரியும்,

97
00:07:18,605 --> 00:07:21,191
ஆனால் ஒரு ஜெட் எடுக்கும் நேரத்தை விட
இரண்டு முறை எடுக்கும்

98
00:07:21,275 --> 00:07:24,444
இந்த விமானத்தில், ஏதோ ஒன்று
சுவாரஸ்யமாக இருந்தது.

99
00:07:24,528 --> 00:07:26,196
அதிலும் குறிப்பாக என் முதல் பயணம் இது.

100
00:07:28,532 --> 00:07:31,577
ஒரு பூப்போட்ட பர்ஸில் நான் காசு சேர்த்தது
எனக்கு ஞாபகம் இருக்கிறது.

101
00:07:32,202 --> 00:07:34,746
உங்க பாட்டி, எங்க அம்மா,

102
00:07:34,830 --> 00:07:37,207
காசு சேர்க்க இந்த பர்ஸை எனக்குக் கொடுத்தாங்க.

103
00:07:38,041 --> 00:07:40,544
இப்ப நீ இதுல பணம் சேர்க்கணும்,

104
00:07:40,627 --> 00:07:42,754
அதை வச்சு நாம சின்னதா ஒரு பயணம் போகலாம்.

105
00:07:42,838 --> 00:07:46,049
நாம ஃபிலடெல்ஃபியாவுக்கு போகலாம்,
ஹார்ட்ஃபோர்டுக்குப் போகலாம்.

106
00:07:46,133 --> 00:07:47,759
நாம பாஸ்டனுக்குப் போகலாம்!

107
00:07:47,843 --> 00:07:48,927
ஆமா.

108
00:07:49,678 --> 00:07:52,431
என் அம்மா ஏதேனும் குறித்து உற்சாகமானால்
ரசிக்கும்படி இருக்கும்.

109
00:07:52,514 --> 00:07:55,184
மொத்த உலகமும் பிரசாகமாக,
நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றும்.

110
00:08:05,736 --> 00:08:06,737
சரி.

111
00:08:06,820 --> 00:08:07,738
சரி.

112
00:08:07,821 --> 00:08:09,573
இதை சர்ப்ரைஸ்ஸா சொல்லலாம்னு நினைச்சேன்,

113
00:08:10,532 --> 00:08:13,285
நாம லாஸ் ஏஞ்சலஸுக்கு மாறி போறோம்.

114
00:08:14,661 --> 00:08:15,704
உண்… உண்மையாவா?

115
00:08:19,041 --> 00:08:22,753
ஆலன்டவுன் ப்லேஹவுஸ்ல
எனக்கு ஒரு டைரக்டர் பழக்கம்,

116
00:08:23,337 --> 00:08:27,090
நாம பிப்ரவரிக்குள்ள லாஸ் ஏஞ்சலஸ் போனா,

117
00:08:28,050 --> 00:08:31,595
எனக்கு பட வாய்ப்பு வாங்கி தரேன்னு
சொல்லியிருக்கார்.

118
00:08:31,678 --> 00:08:32,679
உண்மையாவா?

119
00:08:33,472 --> 00:08:34,640
என்னால நம்ப முடியல.

120
00:08:35,890 --> 00:08:37,726
அம்மா ஏற்கனவே துணை நடிகையாக

121
00:08:37,808 --> 00:08:39,269
நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாள்,

122
00:08:39,352 --> 00:08:41,355
அதனால அதை நம்புவது சிரமமாக இருக்கவில்லை.

123
00:08:41,438 --> 00:08:43,357
அவள் பள்ளியிலும் நாடகம்
கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தாள்,

124
00:08:43,440 --> 00:08:45,859
அதற்கு முன்னர், முழு நேரமாக மேடை நாடகத்தில்
நடித்துக்கொண்டிருந்தாள்.

125
00:08:46,902 --> 00:08:49,947
அவளுக்கு வேலை இல்லாத போது,
எனக்கு முன் நடித்துக் காட்டுவாள்.

126
00:08:50,030 --> 00:08:51,281
இதோ வந்துடுறேன்.

127
00:08:51,365 --> 00:08:53,450
நான் இப்பவே போய் என்னோட டைம்டேபிளைப் பார்க்கணும்.

128
00:08:55,702 --> 00:08:57,871
நான் உண்மையில் என் அறைக்குப்
பறந்துச் சென்றேன்,

129
00:08:57,955 --> 00:08:59,790
அங்கே எனது விமான அட்டவணைகளை வைத்திருந்தேன்.

130
00:09:04,878 --> 00:09:07,840
யுனைடெட், அமெரிக்கன், TWA.

131
00:09:11,093 --> 00:09:14,054
இதோ.
"புரொபெல்லர் ஒரு வழி இரவு விமானம்.

132
00:09:14,137 --> 00:09:17,224
$95 முழு கட்டணம், குழந்தைகளுக்குப் பாதி கட்டணம்."

133
00:09:17,307 --> 00:09:18,308
இது தான்!

134
00:09:18,392 --> 00:09:20,102
இப்போ விமான நேரத்தைப் பார்க்கலாம்.

135
00:09:21,353 --> 00:09:23,814
"டிரான்ஸ் வர்ல்ட் ஏர்லைன்ஸ், ஃபிளைட் 393

136
00:09:23,897 --> 00:09:26,275
ஐடில்வைல்ட் விமான நிலையதிலிருந்து
இரவு 9:00 மணிக்கு கிளம்புது.

137
00:09:26,358 --> 00:09:28,443
லாஸ் ஏஞ்சலஸுக்கு சூப்பர் கான்ஸ்டெலேஷன் சேவை,

138
00:09:28,527 --> 00:09:30,737
இடையில் பிட்ஸ்பர்க்,
டேடன், சிகாகோ, கேன்சஸ் சிட்டி,

139
00:09:30,821 --> 00:09:34,867
டென்வர், அப்புறம் லாஸ் ஏஞ்சலஸில நிறுத்தங்கள்.

140
00:09:34,950 --> 00:09:37,244
அடுத்த நாள் மாலை 3:00 மணிக்குப் போய் சேருது."

141
00:09:37,911 --> 00:09:39,872
டிரான்ஸ் வர்ல்ட் ஏர்லைன்ஸ் மட்டுமே

142
00:09:39,955 --> 00:09:44,877
அமெரிக்காவின் 70 நகரங்களை,
வெளிநாடுகளில் 15 உலக மையங்களோடு இணைக்கிறது.

143
00:09:45,419 --> 00:09:46,795
தேசமுழுதும், உலகமுழுதும்

144
00:09:46,879 --> 00:09:47,921
நம்பிடுங்கள்…

145
00:09:50,549 --> 00:09:52,301
TWA தான் சரியான வழி

146
00:10:01,185 --> 00:10:02,728
நான் கீழே இறங்கி வருவதற்குள்,

147
00:10:02,811 --> 00:10:04,396
ஹாலில் விளக்குகள் அணைந்திருந்தன.

148
00:10:06,356 --> 00:10:09,860
ஸ்டீரியோவில் ரேடியோ மூலமாக
மென்மையாக இசை இசைத்துக் கொண்டிருந்தது.

149
00:10:10,527 --> 00:10:12,863
ஜாக் ஜோன்ஸ் பாடிய "வைவ்ஸ் அண்டு லவ்வர்ஸ்".

150
00:10:12,946 --> 00:10:16,742
அவளது சிகரெட் இருளில் எரிந்து கொண்டிருந்தது,
அவளருகில் ஒரு கிளாஸில் வெள்ளை ஒயின்.

151
00:10:18,035 --> 00:10:21,205
பின்னர், லாஸ் ஏஞ்சலஸ் செல்வது குறித்து
அவள் கூறியது உண்மையாக இல்லாதிருக்குமோ

152
00:10:21,288 --> 00:10:22,372
என்று நான் கவலைப்பட்டேன்.

153
00:10:23,165 --> 00:10:24,958
அது அவள் கண்ட பகற்கனவாக இருந்திருக்கலாம்.

154
00:10:27,211 --> 00:10:28,295
ம்.

155
00:10:28,378 --> 00:10:30,672
நான் இன்னும் ஒரு குறுகிய பயணத்திற்கு
சேமிக்கலாம் என்று நினைத்தேன்.

156
00:10:30,756 --> 00:10:33,342
நான்…
நான் மீண்டும் என் அட்டவணைகளைப் பார்க்க வேண்டும்.

157
00:10:39,139 --> 00:10:42,059
என் பாட்டி ஒரு
'57 ப்லிமத் பெல்வடியர் வைத்திருந்தார்.

158
00:10:42,601 --> 00:10:45,896
ஆக, 1962 டிசம்பரில்,

159
00:10:45,979 --> 00:10:50,067
நாங்கள் ஐடில்வைல்ட் விமான நிலையம் போய்க்
கொண்டிருந்தோம், என் மனதில் விமான எண் 393 உடன்.

160
00:10:50,984 --> 00:10:52,528
நாம எப்ப போய் சேருவோம்?

161
00:10:52,611 --> 00:10:55,822
செல்லம், ஸ்பீடோமீட்டர்
62-க்கு போகும் போது,

162
00:10:55,906 --> 00:10:57,282
நாம அங்க இருப்போம்.

163
00:10:58,742 --> 00:11:00,786
"பேன் ஏம்"-ல் பறந்து,
ஏழு மணி நேரத்தில் பாரீஸ் சென்றிடுங்கள்,"

164
00:11:00,869 --> 00:11:04,414
அல்லது "TWA, கலிஃபோர்னியா சென்றிட சிறந்த வழி,"
என்பன போன்று,

165
00:11:04,498 --> 00:11:06,750
ஒருவர் பயணித்திடக் கூடிய சாத்தியங்களைப்
பிரகடனப்படுத்தும்

166
00:11:06,834 --> 00:11:10,003
பெரிய விளம்பர போர்டுகளைப் பார்க்க
வேடிக்கையாக இருந்தது.

167
00:11:11,338 --> 00:11:12,965
இதோ நான் இந்த விமானத்தில்,

168
00:11:13,048 --> 00:11:15,551
இந்த விமான நிறுவனம் வழங்கும்,
மிக தூரமான பயணத்தில் போய்க் கொண்டிருக்கிறேன்.

169
00:11:16,593 --> 00:11:20,222
விமானத்தின் இந்த முதல் பகுதியில்
மொத்தம் 15 பேர் இருந்தனர்.

170
00:11:20,305 --> 00:11:23,058
நான் ஒரு வேட்டை தொப்பியை அணிந்திருந்தேன்,
அதை எடுக்க மறந்துவிட்டேன்,

171
00:11:23,141 --> 00:11:25,352
வெளியில் குளிரிலிருந்து வந்ததால் இருக்கலாம்.

172
00:11:25,435 --> 00:11:27,980
எது என்னவோ, விமானம் எழும்பும் போது,
அது தான் என் தோற்றம்.

173
00:11:29,481 --> 00:11:31,942
எனக்காக என் அம்மா உற்சாகமாக இருந்தது
எனக்குத் தெரிந்தது,

174
00:11:32,025 --> 00:11:35,612
ஆனால் இந்தத் தருணத்தில், அவள் விமானம்
பறப்பதற்காகப் பொறுமையின்றி காத்திருந்தாள்,

175
00:11:35,696 --> 00:11:37,823
அப்போது தான் அவளுக்கு சிகரெட்டும்,
மதுவும் எடுக்க முடியுமென்று.

176
00:11:43,620 --> 00:11:47,124
எஞ்சின்களின் பின்புறத்திலிருந்து
தீப்பிழம்புகள் வருவதை ரசித்துக்கொண்டிருந்தேன்.

177
00:11:47,749 --> 00:11:49,543
விமானத்தில் இருக்கும் பத்திரிகை,

178
00:11:49,626 --> 00:11:51,712
அது புரொப்பலர் எஞ்சினில்
வழக்கமானது என்று கூறியது.

179
00:11:59,136 --> 00:12:00,888
வா என்னோடு பறந்திடு

180
00:12:00,971 --> 00:12:04,558
நாம் பறக்கலாம், பறந்து போகலாம்

181
00:12:05,726 --> 00:12:09,021
உனக்கு அரிதான மது வேண்டுமெனில்

182
00:12:09,104 --> 00:12:10,731
தூர பம்பாயில் பார் ஒன்று உள்ளது…

183
00:12:10,814 --> 00:12:14,735
நாங்கள் ரன்வேயில் வேகமாகச் செல்ல,
ஒர் இனம்புரியா உணர்வு என்னை ஆட்கொண்டது.

184
00:12:14,818 --> 00:12:17,404
அப்படியே அந்தத் தருணத்தில்,
விமானம் தரையை விட்டு எழும்பியது.

185
00:12:22,534 --> 00:12:24,286
நான் பறக்கிறதை என்னால நம்பமுடியல.

186
00:12:25,120 --> 00:12:26,622
என் அம்மா முன்னோக்கிப் பார்த்து,

187
00:12:26,705 --> 00:12:29,124
பிறகு திரும்பி, என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

188
00:12:29,208 --> 00:12:31,293
அம்மாவை எப்போதும் நான் அப்படியே நினைவில்
வைத்துக்கொள்வேன்.

189
00:12:38,717 --> 00:12:42,179
நான் எதிர்பார்த்ததை விட மேலெழும்புவது
சுமூகமாக இருந்தது.

190
00:12:42,262 --> 00:12:45,224
அதே காரணத்துக்காக,
அன்றிரவு அது வரை நடந்தவை எல்லாம்

191
00:12:45,307 --> 00:12:46,350
கச்சிதமாகத் தோன்றின.

192
00:12:46,433 --> 00:12:50,312
பல வருடங்களுக்கு, நான் என்ன
எதிர்மறை அனுபவங்களை எதிர்கொண்டாலும்,

193
00:12:50,395 --> 00:12:52,147
விமான நிலையத்திலிருந்து கிளம்பி,

194
00:12:52,231 --> 00:12:54,691
நான் செல்லுமிடம் சென்றடையும் வரை,

195
00:12:54,775 --> 00:12:57,319
வாழ்க்கை பாதுகாப்பாகத் தோன்றியது,
நானும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

196
00:13:02,199 --> 00:13:04,034
என் அம்மாவுக்கு
மன்ஹாட்டன் காக்டெயில் பிடிக்கும்,

197
00:13:04,117 --> 00:13:05,953
ஆனால் எனக்கு கோக்க கோலாக்கள் பிடிக்கும்.

198
00:13:10,165 --> 00:13:12,584
லிஸ் எங்கள் இருக்கைகளின் அருகில் வந்தாள்.

199
00:13:12,668 --> 00:13:14,169
உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரட்டுமா?

200
00:13:14,253 --> 00:13:16,004
- எனக்கு கோக் கிடைக்குமா?
- கண்டிப்பா.

201
00:13:16,088 --> 00:13:17,673
- எனக்கு ஒரு மன்ஹாட்டன் வேணும்.
- நிச்சயமா.

202
00:13:17,756 --> 00:13:19,216
நான் இப்ப சிகரெட் பிடிக்கலாமா?

203
00:13:19,299 --> 00:13:20,300
நிச்சயமா.

204
00:13:22,344 --> 00:13:24,513
நியூபோர்ட் ஃபில்டர் சிகரெட்கள்.

205
00:13:24,596 --> 00:13:27,266
நடுவில் பிறை நிலாவுடன், அந்த நீலப்பச்சை பெட்டி,

206
00:13:27,349 --> 00:13:30,060
என் மனதுக்கு எப்போதும்
இன்பமான நினைவுகளைக் கொண்டுவரும்.

207
00:13:32,479 --> 00:13:33,480
அவள் அதைப் பற்ற வைத்து,

208
00:13:33,564 --> 00:13:36,692
அவள் வாயிலிருந்து முதல் திருப்திகரமான,
புகை வெளியே வருகையில்,

209
00:13:37,401 --> 00:13:38,986
நானும், "என்ன அற்புதமாக உள்ளது,"
என நினைப்பேன்.

210
00:13:39,736 --> 00:13:42,239
அம்மாவின் நாடக நண்பர்கள் எல்லோரும்
புகைப்பதுண்டு.

211
00:13:42,322 --> 00:13:45,200
உண்மையில், புகைக்காத பெரியவர்களை
எனக்கு ஞாபகமே இல்லை.

212
00:13:49,162 --> 00:13:51,331
இரவு வானில் ஒவ்வொரு விண்மீனையும்
என்னால் பார்க்க முடிந்தது.

213
00:13:53,458 --> 00:13:56,336
அல்லது ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது
அப்படியாகத் தோன்றியது.

214
00:13:57,045 --> 00:14:00,507
"இது மிக அழகாக உள்ளது.
மக்கள் ஏன் இப்படி விமானங்களிலேயே வாழ்வதில்லை?"

215
00:14:00,591 --> 00:14:03,677
சில நேரம், வீட்டில், பின்னிரவுகளில்,
படுக்கையில் முழித்திருந்து,

216
00:14:03,760 --> 00:14:05,888
நூயார்க் அல்லது லகார்டியா
விமான நிலையத்திலிருந்து கிளம்பி,

217
00:14:05,971 --> 00:14:08,765
வீட்டின் மீது பறந்து செல்லும் விமானத்தின் உறுமலைக்

218
00:14:10,058 --> 00:14:12,853
கேட்டுக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது.

219
00:14:13,729 --> 00:14:16,857
"இந்த பின்னிரவில் இந்த விமானம்
எங்கு போய்கொண்டிருக்கிறது?

220
00:14:17,441 --> 00:14:18,859
அதில் யார் இருப்பார்கள்?

221
00:14:18,942 --> 00:14:21,653
அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்களா? விமானத்தில்
படுக்கைகள் இருக்குமா?" என நினைப்பதுண்டு.

222
00:14:23,113 --> 00:14:24,239
இதோ,

223
00:14:24,323 --> 00:14:27,576
அன்று வியந்த விமானத்தில் கூட
நான் இப்போது பறந்துக்கொண்டிருக்கலாம்.

224
00:14:29,953 --> 00:14:34,541
3D சீட்டில இருக்கிறவர் அவரோட காசில
இந்த டிரிங்க்கை உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார்.

225
00:14:34,625 --> 00:14:37,252
ஓ, அப்படியா?

226
00:14:37,336 --> 00:14:39,796
நன்றி சொன்னேன்னு அவர்கிட்ட சொல்லிடுங்க.

227
00:14:39,880 --> 00:14:41,965
என் அம்மா யாரையும்
இம்ப்ரெஸ் செய்ய விரும்பும் போது,

228
00:14:42,049 --> 00:14:44,343
அவளது குரல் கம்பீரமாகவும், வளமாகவும் மாறும்.

229
00:14:44,426 --> 00:14:46,553
அதை அவளது நாடகக் குரல் என்று நான் அழைப்பதுண்டு.

230
00:14:46,637 --> 00:14:48,805
நான் அவ்வாறு சொல்லும் போது
அவள் விரும்பமாட்டாள்,

231
00:14:48,889 --> 00:14:50,599
ஆனாலும் அதைப் பயன்படுத்துவதை
அவள் நிறுத்தவில்லை.

232
00:14:51,308 --> 00:14:53,227
சிறிது நேரத்தில், எதிர்பார்த்த வண்ணம்,

233
00:14:53,310 --> 00:14:56,021
மிக அழகான ஒருவர், 50 வயது இருக்கும்,

234
00:14:56,104 --> 00:14:58,315
எங்கள் அருகில், நடைபாதைக்கு
அந்தப் பக்கமாக அமர்ந்தார்.

235
00:14:58,398 --> 00:15:00,567
அவர் தான் தனக்கு பானம் வழங்கியவரோ

236
00:15:00,651 --> 00:15:02,611
என உடனே என் அம்மா வியந்தார்.

237
00:15:02,694 --> 00:15:04,571
நான் இங்க பக்கத்தில உட்காரலாமா?

238
00:15:04,655 --> 00:15:07,282
உட்காரலேன்னா, நான் இழுத்து உட்கார வச்சுடுவேன்.

239
00:15:09,576 --> 00:15:11,745
எனக்கு பறக்கிறதுன்னாலே ரொம்ப பயம்.

240
00:15:11,828 --> 00:15:13,121
உங்களுக்கு பயமெல்லாம் கிடையாது.

241
00:15:13,205 --> 00:15:14,623
எதிர்த்து பேசாத.

242
00:15:14,706 --> 00:15:16,416
ஆனால் நீங்க தான் பயப்படலையேம்மா.

243
00:15:16,500 --> 00:15:20,254
செல்லம், நீ காக்பிட் போய் பைல்ட்களைப் பார்த்துட்டு வா,
சரியா?

244
00:15:21,171 --> 00:15:22,840
அம்மா என் மேல் கோபமாக உள்ளாரென

245
00:15:22,923 --> 00:15:25,008
நான் நினைத்தாலும் கூட,
உண்மையில், அது ஒரு நல்ல யோசனை தான்.

246
00:15:25,092 --> 00:15:27,010
ஆக, என் அம்மாவை அவள் போக்கிற்கு விட்டுச் சென்றேன்.

247
00:15:28,053 --> 00:15:32,391
காக்பிட்டிற்கு பாதி வழியில்,
ஒரு மிக விசித்திரமான காட்சியைப் பார்த்தேன்.

248
00:15:38,230 --> 00:15:40,858
ஹலோ. நான் தான் அந்த பத்து அடி உயர மனிதன்.

249
00:15:41,358 --> 00:15:42,943
என்னோட ஆட்டோகிராஃப் வேணுமா?

250
00:15:44,069 --> 00:15:45,112
யாரு?

251
00:15:45,195 --> 00:15:46,196
பத்து அடி உயர மனிதன்!

252
00:15:46,280 --> 00:15:48,490
பார்னம் அண்டு பெய்லி சர்கஸ்ல வேலை பார்க்கிறேன்.

253
00:15:48,574 --> 00:15:50,325
நான் தான் அந்த பத்து அடி உயர மனிதன்.

254
00:15:51,785 --> 00:15:52,995
சரி.

255
00:15:57,624 --> 00:16:00,460
'60-களின் ஆரம்பத்தில்,
காக்பிட் கதவுகள் மூடியிருக்காது,

256
00:16:00,544 --> 00:16:02,546
யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று வரலாம்,

257
00:16:02,629 --> 00:16:04,882
வழக்கமாக, விமானப் பணிப்பெண்களின் அனுமதியுடன்.

258
00:16:04,965 --> 00:16:06,091
லிஸ்ஸை அங்கே காண இயலவில்லை,

259
00:16:06,175 --> 00:16:08,510
அதனால் நான் காத்திராமல்
காக்பிட் கதவைத் திறந்தேன்.

260
00:16:09,178 --> 00:16:12,181
முன்பக்கமாகப் பார்த்து மூவர் உட்கார்ந்திருந்தனர்,
நான் நுழைந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.

261
00:16:12,264 --> 00:16:14,641
- சொல்லு, அவ அழகா இருந்தா, இல்லையா?
- ஆமா, அற்புதமாக தான் இருந்தா.

262
00:16:14,725 --> 00:16:17,311
ஆனால் அவ அதை நம்ம எல்லார் கூடவும்
பண்ணதை என்னால் நம்ப முடியல.

263
00:16:17,394 --> 00:16:18,562
- ஆமா.
- என்னால முடியுது.

264
00:16:18,645 --> 00:16:20,731
அவர்களில் ஒருவர் பேசியதில்,
எனக்கு ஒரு பகுதி தான் புரிந்தது.

265
00:16:20,814 --> 00:16:23,358
பின்னாளில், நான் வளர்ந்தவுடன் தான் புரிந்தது,

266
00:16:23,442 --> 00:16:25,903
அவர்கள் செக்ஸ் அல்லது எதையோ பற்றி தான்
பேசிக்கொண்டிருந்தார்கள் என்று.

267
00:16:28,655 --> 00:16:31,742
ஹே, நீ…
நீ இன்னைக்குப் பிட்ஸ்பர்க் போறியா?

268
00:16:32,326 --> 00:16:34,369
இல்ல, லாஸ் ஏஞ்சலஸ் போறேன்.

269
00:16:35,537 --> 00:16:37,164
எப்படி இந்த போரான ட்ரிப்ல வந்து சேர்ந்த?

270
00:16:37,247 --> 00:16:39,333
எனக்கு முடிஞ்ச அளவு ஃப்ளைட்ல இருக்கணும்,

271
00:16:39,416 --> 00:16:41,627
அம்மாவுக்கு, நான்-ஸ்டாப் ஜெட் புக் பண்ண காசில்ல.

272
00:16:42,419 --> 00:16:45,214
எனக்கு விமானங்கள் பிடிக்கும் என்பதை
அவர்கள் விரும்பியிருப்பார்களென நினைத்தேன்,

273
00:16:45,714 --> 00:16:48,967
ஆனால் அவர்கள் அதிலுள்ள அசௌகரியத்தைப்
பார்த்தார்கள் போலும்.

274
00:16:49,051 --> 00:16:51,094
சரி, சரி.
நாங்க உன் கூட சிகாகோ வரை தான் வர்றோம்.

275
00:16:51,178 --> 00:16:53,805
அதனால், உனக்கு எப்ப எல்லாம் போர் அடிக்குதோ,
நீ தாராளமா இங்க வரலாம்.

276
00:16:53,889 --> 00:16:56,433
ஆனால் அடுத்த முறை நீ
ஏர் ஹோஸ்டெஸ் கிட்ட கேட்கணும், சரியா?

277
00:16:57,142 --> 00:16:58,143
கண்டிப்பா.

278
00:17:00,812 --> 00:17:01,813
நன்றி.

279
00:17:06,026 --> 00:17:07,194
அது என்ன பத்து அடி உயர மனிதன்?

280
00:17:07,986 --> 00:17:09,154
அது உன்னோட புது கர்ள்ஃபிரண்ட்.

281
00:17:09,238 --> 00:17:12,907
என்னவாகிலும், நான்
பறந்துக்கொண்டிருந்தேன், இரவு முழுவதிலும் கூட.

282
00:17:12,991 --> 00:17:14,117
வாழ்க்கை இதை விட நன்றாக இருக்குமா என்ன?

283
00:17:14,701 --> 00:17:16,286
நான் மீண்டும் என் இருக்கைக்குச் செல்வதற்குள்,

284
00:17:16,369 --> 00:17:17,788
அம்மா டிரிங்க்ஸ் இரண்டாவது ரவுண்டு
எடுத்துக்கொண்டிருந்தாள்.

285
00:17:17,871 --> 00:17:20,374
அதோடு தனது புதிய பாய்ஃபிரெண்டு ஹாரியுடன்
ஏற்கனவே தொட்டுப் பேச ஆரம்பித்திருந்தாள்.

286
00:17:20,958 --> 00:17:23,167
இது என்னோட குட்டிப் பையன், ஜெஃப்.

287
00:17:23,252 --> 00:17:25,127
- ஹாய், ஜெஃப்.
- ஹாய்.

288
00:17:25,212 --> 00:17:26,797
இது ஹாரி.

289
00:17:26,880 --> 00:17:28,674
ஹாரி பிட்ஸ்பர்க்கிலிருந்து வரார், செல்லம்.

290
00:17:29,424 --> 00:17:30,801
இவர் ஒரு லாயர்.

291
00:17:30,884 --> 00:17:33,470
இவருக்கு பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ்ல
கொஞ்சம் பேரைத் தெரியுமாம்.

292
00:17:34,012 --> 00:17:35,097
அருமை, இல்லையா?

293
00:17:36,557 --> 00:17:38,809
உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?
உங்களுக்குக் குழந்தைகள் இருக்கா?

294
00:17:40,519 --> 00:17:42,896
ஆமா ஆயிடுச்சு. எனக்கு ஒரு பையனும்,
பொண்ணும் இருக்காங்க.

295
00:17:43,981 --> 00:17:44,982
ஓ. நல்லது.

296
00:17:55,701 --> 00:17:57,119
உனக்கு சிக்கன் பிடிக்கும் தானே?

297
00:17:57,202 --> 00:17:58,745
எனக்கு ஃப்ரைடு சிக்கன் பிடிக்கும்.

298
00:17:58,829 --> 00:18:00,581
ம், இது அது மாதிரி தான்.

299
00:18:00,664 --> 00:18:04,543
இது பேரு சிக்கன் கார்டான் ப்ளூ,
ரொம்ப டேஸ்டியா இருக்கும்.

300
00:18:04,626 --> 00:18:07,087
சரி. எனக்குக் கொஞ்சம் கொடுங்க.

301
00:18:15,596 --> 00:18:17,055
திரும்ப என் இருக்கைக்குச் சென்ற போது,

302
00:18:17,139 --> 00:18:19,474
ஹாரி என் அம்மா காதில் ஏதோ
கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்.

303
00:18:20,142 --> 00:18:23,562
அவர் முடிக்கும் வரை நான் காத்துக்கொண்டிருந்தேன்,
அப்போது தான் அம்மா கோபப்படமாட்டாள்.

304
00:18:30,611 --> 00:18:32,946
ஓ, என்னவொரு அற்புதமான மனிதர்.

305
00:18:33,030 --> 00:18:34,489
ரொம்ப நல்லா பேசினார்.

306
00:18:34,573 --> 00:18:36,325
சரியாக உச்சரித்து, நிறுத்தி,

307
00:18:36,408 --> 00:18:38,577
நன்றாகப் பேசும் மக்களை என் அம்மாவுக்குப் பிடிக்கும்.

308
00:18:38,660 --> 00:18:40,954
மக்கள் ஒரு கதாப்பாத்திரத்திற்காக
பயன்படுத்தினாலொழிய,

309
00:18:41,038 --> 00:18:43,207
அவர்கள் அந்நிய உச்சரிப்பைக் கொண்டிருந்தால்
அவள் விரும்புவதில்லை.

310
00:18:43,290 --> 00:18:46,460
நன்றாகப் பேசுவது ஒருவர் எவ்வளவு படித்தவர்
என்பதைப் பிரதிபலிக்கிறது என்பாள்.

311
00:18:47,085 --> 00:18:49,129
அவள் தோழி ஜூலியா ஓர் அழகான பெண்மணி,

312
00:18:49,213 --> 00:18:51,632
வசதி படைத்தவள், ஒரு பணக்கார
கண்டுப்பிடிப்பாளருடன் திருமணமானவள்,

313
00:18:51,715 --> 00:18:53,342
அவளிடம் எல்லாமே இருப்பதாகத் தோன்றியது,

314
00:18:53,425 --> 00:18:55,677
ஆனால் அவளிடம் நியூ ஜெர்ஸி உச்சரிப்பு இருப்பதை

315
00:18:55,761 --> 00:18:57,846
அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

316
00:18:57,930 --> 00:18:59,681
அவள், "என்ன கொடுமை.

317
00:18:59,765 --> 00:19:02,976
அத்தனை அழகும், பணமும், கூடவே
கொடுமையான நியூ ஜெர்ஸி உச்சரிப்பும்," என்பாள்.

318
00:19:03,685 --> 00:19:05,229
இதில் வேடிக்கை என்னவென்றால், சில சமயம்,

319
00:19:05,312 --> 00:19:07,856
அம்மாவுக்கே அந்த வகையான உச்சரிப்பு இருக்கும்.

320
00:19:08,982 --> 00:19:13,403
செல்லம், நாம எப்பவாவது பிட்ஸ்பர்க் போனா, ஹாரி
நம்மள விருந்துக்குக் கூட்டிப் போக விரும்புறார்.

321
00:19:13,487 --> 00:19:16,323
ஓ, அவர் மனைவி, குழந்தைகள் கூடவா?

322
00:19:17,032 --> 00:19:18,200
ரொம்ப புத்திசாலி.

323
00:19:21,787 --> 00:19:24,122
அப்படியே ஜன்னலுக்கு வெளியே இரவின் இருள்

324
00:19:24,206 --> 00:19:25,415
பனி மேகங்களாக மாற,

325
00:19:25,499 --> 00:19:27,626
எனக்கு முன் ஏதோ வைக்கப்படுவதை உணர்ந்தேன்.

326
00:19:27,709 --> 00:19:29,336
இது உனக்கு.

327
00:19:29,419 --> 00:19:32,756
வாசனையிலேயே
அது சிக்கன் கார்டான் ப்ளூ என்று தெரிந்தது.

328
00:19:32,840 --> 00:19:36,426
ஆஹா. அது பொறித்த கோழி போன்று தான் இருந்தது,
ஆனால் அதை விட நன்றாக இருந்தது.

329
00:19:37,052 --> 00:19:38,387
நான் அதைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

330
00:19:43,350 --> 00:19:45,894
எனக்கு சிக்கன் பிடிக்கும், சீஸும் பிடிக்கும்.

331
00:19:45,978 --> 00:19:48,021
ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட முடியுமா
என்று தெரியவில்லை.

332
00:19:48,522 --> 00:19:50,566
அம்மா, எனக்கு இது பிடிக்கல.

333
00:19:50,649 --> 00:19:51,733
நான் இன்னொரு கோக் வாங்கி குடிக்கலாமா?

334
00:19:51,817 --> 00:19:53,485
கண்டிப்பா, செல்லம்.

335
00:19:57,239 --> 00:19:59,825
பிட்ஸ்பர்க் பகுதியில்
நாங்கள் இறங்கத் துவங்கியதும்,

336
00:19:59,908 --> 00:20:01,785
என்னால் ஜன்னலுக்குக் வெளியே பார்க்க முடிந்தது.

337
00:20:02,536 --> 00:20:04,538
நாங்கள் இப்போது மேக அடுக்குக்கு கீழே இருந்தோம்,

338
00:20:04,621 --> 00:20:06,498
நன்றாகவே பனிப் பெய்து கொண்டிருந்தது.

339
00:20:07,124 --> 00:20:09,960
கீழே நகரத்தைப் பார்ப்பதற்கு
உண்மையில் அழகாக இருந்தது,

340
00:20:10,043 --> 00:20:11,753
அந்த வானிலையில் மின்னுவது போல் இருந்தது.

341
00:20:12,337 --> 00:20:14,464
கீழே, ஏதோ ஒரு வீட்டில், ஏதோ ஒரு சிறுவன்,

342
00:20:14,548 --> 00:20:17,176
மேலே எஞ்சின்களின் உறுமலைக் கேட்டுக்கொண்டு,

343
00:20:17,259 --> 00:20:19,678
"இந்த பின்னிரவில் யார் விமானத்தில் போகிறார்கள்?

344
00:20:19,761 --> 00:20:22,431
அவர்கள் எங்கே போகிறார்கள்?
அவர்கள் உறங்குகிறார்களா இல்லையா?"

345
00:20:22,514 --> 00:20:25,142
என்று வியந்து கொண்டிருக்கலாம்
என்று நினைக்கத் துவங்கினேன்.

346
00:20:29,897 --> 00:20:32,441
தரை இறங்குவதை எங்களால்
உணரவே முடியவில்லை, அவ்வளவு சுமூகமாக இருந்தது.

347
00:20:32,524 --> 00:20:33,525
பிட்ஸ்பர்க்

348
00:20:33,609 --> 00:20:35,694
விமானம் நகர்ந்து செல்லும்
பாதையில் இருந்த நீல விளக்குகள்

349
00:20:35,777 --> 00:20:37,821
பனியில் இன்னும் பிரகாசமாகத் தோன்றின.

350
00:20:38,447 --> 00:20:39,948
நாங்கள் கேட்டிற்கு நகர்ந்து செல்கையில்,

351
00:20:40,032 --> 00:20:43,118
அறிவிப்பு ஸ்பீக்கர்களில்
ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது.

352
00:20:43,702 --> 00:20:45,329
நான் உங்கள் கேப்டன் பேசுகிறேன்.

353
00:20:45,412 --> 00:20:47,789
எதிர்பாராத பனிப்புயல் காரணமாக,

354
00:20:47,873 --> 00:20:50,209
டேடன் மற்றும் சிகாகோவுக்கு
தொடர்ந்து செல்பவர்களுக்கு,

355
00:20:50,292 --> 00:20:53,003
அடுத்த அறிவிப்பு வரும் வரை பயணம் தாமதப்படும்.

356
00:20:53,086 --> 00:20:56,298
கூடுதல் தகவல்களுக்கு கேட்டில் உள்ள
டிக்கெட் ஏஜென்ட்டிடம் பேசவும்.

357
00:20:58,217 --> 00:20:59,218
கவலைப்படாதீங்க.

358
00:20:59,301 --> 00:21:02,679
பயணிகளுக்கு, TWA தங்குறதுக்கு ஹோட்டல்
ஏற்பாடு பண்ணும்.

359
00:21:02,763 --> 00:21:04,139
- இலவசமா. சரியா?
- நன்றி.

360
00:21:04,223 --> 00:21:05,557
ஆக, எங்களுக்கு ஹோட்டல் ரூம் இருக்கும், இல்லையா?

361
00:21:05,641 --> 00:21:07,309
- ஆமா. கவலைப்படாதீங்க.
- நல்லது.

362
00:21:08,101 --> 00:21:09,102
சரி.

363
00:21:14,608 --> 00:21:17,444
கவுண்ட்டர்ல இருந்தவர் கிட்ட
இந்த ஹோட்டல் எப்போ கட்டப்பட்டதுன்னு கேட்டேன்.

364
00:21:17,528 --> 00:21:19,112
அவர் 1952-லன்னு சொன்னார்.

365
00:21:19,821 --> 00:21:22,074
1952 துவங்கி, நள்ளிரவில்,

366
00:21:22,157 --> 00:21:23,992
இப்படி நாங்கள் செய்துக்கொண்டிருப்பது போல,

367
00:21:24,076 --> 00:21:26,578
செய்திருக்கக் கூடியவர்களைப் பற்றி
சிந்தித்துப் பார்த்தேன்.

368
00:21:32,626 --> 00:21:33,627
சரி, செல்லம்.

369
00:21:33,710 --> 00:21:36,630
விமானம் ரெடியாகும் போது,
ஏர்லைன்ஸ்ல இருந்து கூப்பிடுவாங்க,

370
00:21:36,713 --> 00:21:40,217
ஆனால் அதுக்கு ரெண்டு மணிநேரமாவது ஆகும்.
அதனால, நீ கொஞ்சம் தூங்கலாம்.

371
00:21:40,300 --> 00:21:41,635
- சரியா?
- சரி.

372
00:21:41,718 --> 00:21:43,428
நான் கீழே லவுஞ்சுக்குப் போய்
டிரிங்ஸ் எடுக்கப் போறேன்.

373
00:21:43,512 --> 00:21:44,513
சரி.

374
00:21:44,596 --> 00:21:46,557
- சரி. ஒண்ணும் பிரச்சினை இல்லையே?
- இல்ல.

375
00:21:46,640 --> 00:21:48,642
- சரி. லவ் யூ.
- லவ் யூ டூ.

376
00:21:50,894 --> 00:21:53,105
எப்படியோ, இதில்
ஹாரியும் இருப்பாரென தெரிந்தது,

377
00:21:53,188 --> 00:21:54,773
ஆனால் என் நாவை அடக்கிக் கொண்டேன்.

378
00:22:24,219 --> 00:22:25,220
ஹலோ?

379
00:22:26,471 --> 00:22:28,223
சரி, நாங்க வந்துடுறோம்.

380
00:22:30,434 --> 00:22:32,978
நான் கதவைத் திறந்து
வெராண்டாவில் ஓடினேன்,

381
00:22:33,061 --> 00:22:35,439
லிஃப்ட் பட்டனை திரும்பத் திரும்ப அழுத்தினேன்.

382
00:22:36,231 --> 00:22:38,150
போதும், நிறுத்துங்க.

383
00:22:40,569 --> 00:22:43,447
அம்மா! அம்மா, வாங்க!
நாம விமானத்தை தவற விடப் போறோம்!

384
00:22:45,991 --> 00:22:48,076
அம்மா, வாங்க!
விமானம் 20 நிமிஷத்துல கிளம்புது!

385
00:22:48,160 --> 00:22:49,161
நாம தவறவிடப் போறோம்!

386
00:22:49,912 --> 00:22:52,497
வெராண்டா கடைசியில்,
அம்மா வேறு அறையிலிருந்து வருவதைப் பார்த்தேன்.

387
00:22:52,581 --> 00:22:53,582
வரேன்.

388
00:22:53,665 --> 00:22:55,876
அவள் ஹாரியுடன் இருந்திருந்தாலும்
எனக்குக் கவலையில்லை.

389
00:22:55,959 --> 00:22:58,337
நாங்கள் தொடர்ந்து பயணிப்பதற்கு கேட்டிற்குச் செல்ல

390
00:22:58,420 --> 00:23:00,672
இருபது நிமிடங்கள் இருந்தது மட்டுமே
எனக்குக் கவலை.

391
00:23:01,381 --> 00:23:04,092
காலையில் 3:00 மணிக்கே,
என் அம்மா அருமையான மனநிலையில் இருந்தாள்.

392
00:23:04,176 --> 00:23:05,177
நானும் தான்.

393
00:23:05,260 --> 00:23:08,013
மூன்று மணிநேர உறக்கம்,
இன்னும் போக வேண்டிய பயணம் உள்ளது.

394
00:23:09,640 --> 00:23:12,518
பிட்ஸ்பர்க்கிலிருந்து டேடன் பயணம்
ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக,

395
00:23:13,268 --> 00:23:15,479
நினைத்துப் பார்த்தால்,
மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.

396
00:23:16,271 --> 00:23:19,358
நான் இது வரையில் பார்த்ததை விட
இந்த 40 நிமிடங்களில் தான் என் அம்மா

397
00:23:19,441 --> 00:23:21,109
அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதைக் கவனித்தேன்.

398
00:23:22,027 --> 00:23:23,695
அவள் என்ன சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்?

399
00:23:23,779 --> 00:23:26,406
பின்னாளில், ஆம்,
லிஸ் குறித்த முழு கதையையும் தெரிந்துக்கொண்டேன்.

400
00:23:26,907 --> 00:23:28,367
எனக்கு நிறைய ஞாபகம் இல்ல,

401
00:23:28,450 --> 00:23:30,536
குழப்பமா தான் இருந்துச்சு.

402
00:23:30,619 --> 00:23:34,957
ஆனால் நாட்டை விட்டு ஓடிவரும் போது
எனக்கு ஒன்பது வயசு தான்,

403
00:23:35,040 --> 00:23:38,836
என் தம்பியும், நானும் தான் தப்பிச்சு வர முடிஞ்சது.

404
00:23:38,919 --> 00:23:43,882
துரதிஷ்டவசமாக எங்க அப்பா-அம்மாவ
எங்க கண் முன்னாலேயே கூட்டிட்டு போயிட்டாங்க.

405
00:23:46,009 --> 00:23:47,594
ஓ, செல்லம்.

406
00:23:47,678 --> 00:23:51,431
இல்ல, நா-நான் நல்லா இருக்கேன்.
அதைக் கடந்து வந்துட்டேன்.

407
00:23:51,515 --> 00:23:54,309
அந்த சமயத்தை ஒட்டி நியூ யார்க்
பகுதியில் ஒரு டிவி நிகழ்ச்சி இருந்தது,

408
00:23:54,393 --> 00:23:55,686
அதன் பெயர் "ரிமெம்பர் அஸ்".

409
00:23:56,270 --> 00:23:58,564
அது நாஸி நிகழ்வின் நிஜ வீடியோவைக் காட்டியது.

410
00:23:58,647 --> 00:24:01,817
வேறு எதையும் விட அது எனது கொடுங்கனவுகளுக்குக்
காரணமாக இருந்திருக்க வேண்டும்.

411
00:24:02,317 --> 00:24:04,528
நான் எப்போதும் லிஸ்ஸுக்காக வருத்தப்பட்டேன்.

412
00:24:04,611 --> 00:24:06,572
எப்படியோ, என் அம்மா அவள் மீது
அக்கறை கொண்டிருந்தாள்.

413
00:24:07,114 --> 00:24:10,117
அவளை விட உணர்வு ரீதியான வலியுள்ள ஒருவர்

414
00:24:10,200 --> 00:24:11,493
ஏதோ நிவாரணம் அளித்தது போல் இருந்தது.

415
00:24:13,203 --> 00:24:16,623
திடீரென அந்த பத்து அடி உயர மனிதனைக் குறித்து
அறிந்துக்கொள்ளவில்லை என வருத்தப்பட்டேன்.

416
00:24:16,707 --> 00:24:18,458
எனக்கு பேசுவதற்காவது யாராவது இருந்திருப்பார்கள்.

417
00:24:19,710 --> 00:24:22,629
ஆனால் இன்றிரவு நான்
மாலை விண்மீன்களுடன் இணைவேன்.

418
00:24:23,672 --> 00:24:27,509
அமைதியான விண்மீன்களின் அமைதியான இரவுகள்

419
00:24:27,593 --> 00:24:31,096
என் கிடாரின் அமைதியான இசை

420
00:24:31,180 --> 00:24:34,141
எங்களைச் சுற்றி நிலவி வரும் நிசப்தத்தில்
மிதந்து வருகிறது

421
00:24:34,224 --> 00:24:37,436
டேடனில் நின்ற போது,
விமானத்திலேயே இருக்க முடிவு செய்தோம்.

422
00:24:37,519 --> 00:24:39,396
அம்மாவும் நானும் ஒரு சிறு தூக்கம் போட்டோம்.

423
00:24:39,479 --> 00:24:40,480
டேடன்

424
00:24:40,564 --> 00:24:42,858
நாங்கள் எழுந்திருக்கும் முன்
நாங்கள் மீண்டும் பறந்துக் கொண்டிருந்தோம்.

425
00:24:43,400 --> 00:24:46,153
நாங்கள் பெல்ட் போட்டிருந்ததால்,
லிஸ் எங்களை உறங்க விட்டுவிட்டாள்.

426
00:24:46,236 --> 00:24:48,113
டேடனில் யாரும் உள்ள ஏறவில்லை.

427
00:24:48,197 --> 00:24:50,949
ம், சுவாரஸ்யமாக தோன்றுமளவு எவரும் ஏறவில்லை.

428
00:24:51,033 --> 00:24:52,743
அதிகாலை 4:00 மணிக்கு, யார் ஏறப் போகிறார்கள்?

429
00:24:52,826 --> 00:24:53,827
சிகாகோ

430
00:24:53,911 --> 00:24:55,621
ஆக, சிகாகோ வரையில் நாங்கள் உறங்கினோம்.

431
00:24:59,458 --> 00:25:02,461
ஓரளவு புதிய ஓ'ஹேர் டெர்மினலை அடையும் போது
இன்னும் இருட்டாக இருந்தது.

432
00:25:04,421 --> 00:25:06,131
இது என்னோட கடைசி ஸ்டாப்.

433
00:25:06,215 --> 00:25:07,341
இது தான் என்னோட ஹோம் பேஸ்.

434
00:25:07,841 --> 00:25:11,136
ஆனால் உங்களுக்கு ரெண்டு சர்ப்ரைஸ்
ஏற்பாடு பண்ணிருக்கேன்.

435
00:25:12,513 --> 00:25:14,890
உங்க ரெண்டு பேருக்கும்

436
00:25:14,973 --> 00:25:16,892
கேன்சஸ் சிட்டிக்கும், டென்வர்க்கும் போறதுக்கு

437
00:25:16,975 --> 00:25:19,561
ஃபர்ஸ்ட் க்ளாஸில பறக்க ஏற்பாடு பண்ணிருக்கேன்.

438
00:25:19,645 --> 00:25:23,607
இன்னொரு குட்டி சர்ப்ரைஸ் உங்களுக்கு
டென்வர்ல காத்திட்டிருக்கும்.

439
00:25:24,191 --> 00:25:25,192
அதனால…

440
00:25:30,072 --> 00:25:32,241
விவரங்கள் இதுல இருக்கு.

441
00:25:32,324 --> 00:25:33,992
இதை டிக்கெட் ஏஜென்ட் கிட்ட கொடுங்க.

442
00:25:34,076 --> 00:25:35,244
- சரியா?
- நன்றி.

443
00:25:35,327 --> 00:25:37,663
- சரி. குட்பை.
- நன்றி.

444
00:25:40,290 --> 00:25:42,918
நாங்களே முதல் வகுப்பிற்கு கட்டுவதாக
இருந்தால் எவ்வளவு செலவாகும் என்று மட்டும் தான்

445
00:25:43,001 --> 00:25:45,045
என்னால் சிந்திக்க முடிந்தது.

446
00:25:45,838 --> 00:25:48,131
அது ஒரு வழிக்கு 185 டாலர்.

447
00:25:48,715 --> 00:25:51,426
அதை வைத்து எவ்வளவு பொம்மைகளும்,
ஹாட் டாகுகளும் வாங்கலாம்.

448
00:25:51,510 --> 00:25:54,388
அதோடு இது போன்று
மூன்று நான்கு பயணங்களும் போகலாம்.

449
00:25:54,888 --> 00:25:56,265
என்ன ஒரு பெண், அந்த லிஸ்.

450
00:25:57,558 --> 00:25:59,977
திடீரென, என் அம்மாவின் பாவனை மாறியது.

451
00:26:00,561 --> 00:26:02,896
அவளிடம் கண்ணில் காணக்கூடிய மாற்றத்தை
என்னால் பார்க்க முடிந்தது.

452
00:26:02,980 --> 00:26:07,025
அவள் நேராக, தலையை நிமிர்த்தி,
பாங்காக நடந்தாள்.

453
00:26:07,109 --> 00:26:08,527
நாங்கள் முதல் வகுப்பில் பயணிக்க இருக்கிறோம்.

454
00:26:08,610 --> 00:26:12,322
அவளோ முதல் வகுப்பில் மேற்கு கடற்கரைக்கு
பறக்கும் ஒரு நடிகை.

455
00:26:13,031 --> 00:26:16,118
அந்த போலி சிறுத்தை கோட்டை அணிந்திருக்க
அவள் விரும்பியிருப்பாள்.

456
00:26:16,201 --> 00:26:18,745
நான் தான் வீட்டிலிருந்து கிளம்பும் போது
அதை போடவிடாமல் செய்துவிட்டேன்.

457
00:26:27,337 --> 00:26:28,547
ஹாலிவுட்ல இருந்து கூப்பிட்டாங்க.

458
00:26:29,965 --> 00:26:32,009
உடனே அடுத்த ஃப்ளைட் பிடிச்சு வர சொன்னாங்க.

459
00:26:33,051 --> 00:26:34,136
நீங்க ஒரு நடிகையா?

460
00:26:34,219 --> 00:26:36,805
ஆமா. எப்படி கண்டுப்பிடிச்சீங்க?

461
00:26:36,889 --> 00:26:39,933
என் அம்மா இப்படி
தேவை இல்லாத இடத்தில் வலிய போய் பேசுவாள்.

462
00:26:40,017 --> 00:26:41,185
ஹாலிவுட்டுக்கு வாழ்த்துகள்.

463
00:26:41,852 --> 00:26:43,103
நன்றி.

464
00:26:48,150 --> 00:26:50,402
விமான நிலையம் அழகாக இருந்தது.
ஏதோ காரணத்துக்காக,

465
00:26:50,485 --> 00:26:52,779
ஹாட் டாக் கவுண்டர் அதிகாலை
4:00 மணிக்கே திறந்திருந்தது.

466
00:26:52,863 --> 00:26:54,323
- ஹலோ.
- எனக்கு இரண்டு தேவைப்பட்டது.

467
00:26:54,406 --> 00:26:55,490
அம்மா ஒன்று தான் ஆர்டர் செய்தாள்.

468
00:26:56,116 --> 00:26:57,910
- அவ்வளவு தானா?
- ஆமா.

469
00:26:58,994 --> 00:27:00,621
நான் இன்னொரு ஹாட் டாக் சாப்பிடலாமா?

470
00:27:01,288 --> 00:27:04,041
உனக்கு உண்மையிலேயே இன்னொரு ஹாட் டாக் வேணுமா?

471
00:27:04,666 --> 00:27:07,044
ஆமா, உண்மையிலேயே வேணும்.

472
00:27:07,544 --> 00:27:08,545
சரி.

473
00:27:16,220 --> 00:27:18,180
வாழ்க்கை எனும் மரத்திலிருந்து…

474
00:27:18,263 --> 00:27:20,182
ஜெட் விமானங்கள் போலல்லாமல்
புரொப்பலர் விமானங்களில்

475
00:27:20,265 --> 00:27:23,352
முதல் வகுப்பு எப்போதும் விமானத்தின்
பின்பக்கமாக இருந்தது.

476
00:27:23,894 --> 00:27:26,563
நான் கவனித்த முதல் விஷயம்,
இருக்கைகள் பெரிதாக இருந்தன.

477
00:27:26,647 --> 00:27:28,398
இரண்டாவது, அழகிய வேலைபாடுகள்.

478
00:27:31,902 --> 00:27:34,321
இன்னும், அது சிறந்த ஒன்றே

479
00:27:34,404 --> 00:27:37,282
சிறந்தது இன்னும் வரவிருக்கிறது

480
00:27:40,202 --> 00:27:42,454
சிறந்தது இன்னும் வரவிருக்கிறது

481
00:27:42,538 --> 00:27:45,874
அன்பே, அது நன்றாக இருக்குமல்லவா?

482
00:27:48,210 --> 00:27:52,005
சூரியனைக் கண்டதாக நினைக்கிறீர்கள்
ஆனால் நீங்கள் இன்னும் அது ஒளிர்வதைக் காணவில்லை

483
00:27:52,089 --> 00:27:54,424
விமானம் கிளம்பும் போது,
மிகவும் அமைதியாக இருந்தது.

484
00:27:54,508 --> 00:27:57,678
அதற்காகத் தான் இருக்கைகள்
பின்னால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

485
00:27:57,761 --> 00:27:59,179
ஜெட் விமானங்களில், முன் பக்கம் அமைதியாக இருக்கும்.

486
00:28:00,097 --> 00:28:02,933
அம்மா உண்மையில் முதல் வகுப்பில் இருப்பதில்
உற்சாகமாக இருந்தாள்.

487
00:28:03,016 --> 00:28:07,187
ஒரு ஃபிலிம் ஸ்டூடியோ என்னை
அழைத்து வருவதாக இருந்தால்,

488
00:28:07,271 --> 00:28:11,650
திரைப்பட நடிகர்கள் அமைப்பு இப்படியாகத் தான்
அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தியிருக்கும்.

489
00:28:12,609 --> 00:28:14,111
அது தான் விதி.

490
00:28:19,950 --> 00:28:22,327
மேற்கு நோக்கி விமானம்
பறந்து செல்கையில்,

491
00:28:22,411 --> 00:28:24,872
சூரியன் எழுவதை என்னால் காண முடிந்தது.

492
00:28:24,955 --> 00:28:26,999
நாங்கள் வலது பக்கமாக சிறிது திரும்பியதும்,

493
00:28:27,082 --> 00:28:28,709
சூரிய ஒளி ஜன்னல் வழியே உள்ளே வந்து,

494
00:28:28,792 --> 00:28:31,837
அம்மாவின் முகத்தில் நடனமாடுவது போல் தோன்றியது.

495
00:28:33,422 --> 00:28:37,759
கோடை நிகழ்வில, லைட் அப் த ஸ்கை-ல்
நடிக்கும் போது, ஞாபகம் இருக்கா?

496
00:28:37,843 --> 00:28:43,765
ஒரு விமர்சகர் என்னை க்ராஃபோர்டு, ஸ்டான்விக்
ரெண்டு பேரோட கலவைன்னு சொன்னார்.

497
00:28:44,975 --> 00:28:47,227
ஒரு நிகரில்லா நடிப்புன்னு சொன்னார்.

498
00:28:49,897 --> 00:28:51,565
அருமை, இல்லையா?

499
00:28:53,567 --> 00:29:00,574
இது ஒரு மந்தமான மாலை…

500
00:29:02,367 --> 00:29:05,704
என் வலதுபக்கம் பார்த்த போது,
இந்த தங்க நிற, மின்னும் திரைசீலைகளைக் கவனித்தேன்.

501
00:29:05,787 --> 00:29:07,456
அதற்குப் பின்னால் என்ன இருக்கக்கூடும் என வியந்தேன்.

502
00:29:08,081 --> 00:29:10,626
ஒரு பணிப்பெண்ணுக்காக
நடைபாதையின் இருபக்கமும் தேடினேன்.

503
00:29:10,709 --> 00:29:12,503
சமையலறையின் அருகே ஒருவர் நிற்பதைப் பார்த்தேன்.

504
00:29:13,545 --> 00:29:14,713
அவளைப் பார்த்து சைகை செய்தேன்,

505
00:29:14,796 --> 00:29:17,007
பள்ளியில் ஆசிரியரை அழைப்பது போன்று.

506
00:29:21,970 --> 00:29:25,307
உயரமாய், பழுப்பாய், இளமையாய், அழகாய்

507
00:29:25,390 --> 00:29:28,810
ஈபனீமாவிலிருந்து வந்த பெண் நடந்து செல்கிறாள்

508
00:29:28,894 --> 00:29:30,854
அவள் கடந்து செல்கையில்

509
00:29:30,938 --> 00:29:34,358
அவள் கடந்து செல்லும் ஒவ்வொருவரும்,
"ஆ" என்கின்றனர்.

510
00:29:34,441 --> 00:29:35,859
சொல்லு. உனக்கு என்ன வேணும்?

511
00:29:36,568 --> 00:29:38,278
அந்த குரல்
பழக்கப்பட்ட குரல் போல் தோன்றியது.

512
00:29:38,820 --> 00:29:41,949
நியூ யார்க் விமான நிலையத்தில் நான் கேட்ட
குரல் போலவே இருந்தது.

513
00:29:42,991 --> 00:29:45,702
அந்த நபர் எப்படி இருப்பார் என்று நான்
கற்பனை செய்தது போலவே இருந்தாள்.

514
00:29:47,496 --> 00:29:48,580
அது எதுக்கு?

515
00:29:50,791 --> 00:29:53,544
அது நீண்டதூர இரவு ஃப்ளைட்கள்ல உள்ள ஸ்லீப்பர்.

516
00:29:53,627 --> 00:29:55,087
அதை நாங்க இப்ப பயன்படுத்துறது இல்ல.

517
00:29:55,671 --> 00:29:58,006
அதை எப்ப பயன்படுத்தினீங்க? எந்த வருஷத்தில?

518
00:29:58,090 --> 00:30:00,467
அதை ஏன் பயன்படுத்துறதை நிறுத்தினீங்க?
இப்படி எத்தனை இருக்கு?

519
00:30:00,551 --> 00:30:02,386
ஒண்ணு ஒண்ணா பதில் சொல்லட்டுமா?

520
00:30:02,469 --> 00:30:03,762
சரி.

521
00:30:03,846 --> 00:30:05,889
ம், இந்த ஃப்ளைட் புதுசா ஆரம்பிச்சதில இருந்து,

522
00:30:05,973 --> 00:30:08,267
1959-ல ஜெட் விமானம் வர வரைக்கும்,

523
00:30:08,350 --> 00:30:10,936
நெடுந்தூர நான்-ஸ்டாப் ஃப்ளைட்கள்ல
இதைப் பயன்படுத்தினாங்க.

524
00:30:11,019 --> 00:30:14,106
எப்ப எல்லாம் இந்த விமானம்
எட்டு மணி நேரத்துக்கு மேல பறந்துச்சோ,

525
00:30:14,189 --> 00:30:16,441
ரொம்ப தூரத்துக்கு ராத்திரி பறந்துச்சோ அப்ப எல்லாம்.

526
00:30:16,525 --> 00:30:19,278
இங்க மக்கள் படுப்பாங்க.
இது ஃபர்ஸ்ட் க்ளாஸ் கட்டணத்துல சேர்ந்து வரும்.

527
00:30:19,361 --> 00:30:20,529
ஓ, அருமை.

528
00:30:20,612 --> 00:30:22,447
உங்களுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்?

529
00:30:22,531 --> 00:30:24,992
ம், எங்க அம்மா இந்த விமான துறையில
பல வருஷமா இருக்காங்க.

530
00:30:25,075 --> 00:30:26,952
முதல்ல, 30-கள்ல ஒரு ஏர்ஹோஸ்டெஸ்ஸா இருந்தாங்க.

531
00:30:27,035 --> 00:30:28,078
வாவ்.

532
00:30:28,161 --> 00:30:31,373
அவங்க 1939-ல ரிடையர் ஆயிட்டாங்க,
அதுல இருந்து

533
00:30:31,456 --> 00:30:34,042
நியூ யார்க் விமான நிலையங்கள்ல
ஃப்ளைட் அறிவிப்புகள் சொல்லிட்டிருக்காங்க.

534
00:30:34,960 --> 00:30:35,961
இதோ வந்துடுறேன்.

535
00:30:39,798 --> 00:30:41,216
உண்மையா சொல்றீங்களா?

536
00:30:41,300 --> 00:30:44,928
அவங்களுக்கு இப்ப வயசு என்ன?
அவங்க என்ன மாதிரி ஃப்ளைட்ல எல்லாம் போனாங்க?

537
00:30:45,012 --> 00:30:47,306
விமான நிலையத்தில எங்க வச்சு இந்த
அறிவிப்புகளைச் சொல்லுவாங்க?

538
00:30:47,931 --> 00:30:53,187
ம், அவங்களுக்கு இப்ப 58 வயசு, அவங்க பெரும்பாலும்
DC-3 விமானங்கள்ல போனாங்க.

539
00:30:53,687 --> 00:30:57,149
அவங்க TWA விமான நிலையத்தில, பின்னால ஒரு
சின்ன அறையில உட்கார்ந்து பண்றாங்கன்னு நினைக்கிறேன்.

540
00:30:57,232 --> 00:30:59,735
நிறைய கேள்வி கேட்குற.
உனக்கு பறக்கிறது பிடிக்கும் தானே?

541
00:30:59,818 --> 00:31:00,903
இது தான் உன்னோட முதல் பயணமா?

542
00:31:01,445 --> 00:31:03,906
டோரிஸ் என்னுடைய
எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தாள்.

543
00:31:03,989 --> 00:31:05,490
அவள் எனது புதிய சிறந்த தோழி.

544
00:31:07,326 --> 00:31:08,535
அம்மா! அம்மா! எந்திரிங்க!

545
00:31:08,619 --> 00:31:09,953
எந்திரிங்க!

546
00:31:10,787 --> 00:31:13,040
- என்னாச்சு?
- நீங்க நம்ப மாட்டீங்க.

547
00:31:13,123 --> 00:31:15,542
டோரிஸோட அம்மா தான்
ஐடில்வைல்ட் விமான நிலையத்தில நாம கேட்ட குரல்.

548
00:31:15,626 --> 00:31:19,171
அவங்களுக்கு 58 வயசு,
அவங்க முதல் ஏர்ஹோஸ்டெஸ்ல ஒருத்தங்க.

549
00:31:19,254 --> 00:31:20,631
அம்மா, உங்களுக்கு அவங்களைப் பிடிக்கும்.

550
00:31:20,714 --> 00:31:23,300
அவங்களுக்கு அந்நிய உச்சரிப்பு கிடையாது
அவங்க உண்மையில அழகாவும் இருக்காங்க.

551
00:31:23,383 --> 00:31:25,344
- யாரு?
- டோரிஸ்!

552
00:31:25,427 --> 00:31:28,847
ஓ, அற்புதம், குட்டிப் பையா.

553
00:31:28,931 --> 00:31:31,266
அம்மா, டோரிஸ் முன்னால என்னை
அப்படி கூப்பிடாதீங்க, சரியா?

554
00:31:31,350 --> 00:31:33,685
சரி, செல்லம்.
என்னை இப்ப தூங்க விடு.

555
00:31:40,776 --> 00:31:43,362
அவள் எனக்குப் பிடித்த வண்ணம்
தலையைக் கோதி இருந்தாள்.

556
00:31:43,445 --> 00:31:44,613
வெளிர் கண்கள்.

557
00:31:44,696 --> 00:31:46,406
என்னால் அவளைப் பார்ப்பதை நிறுத்த முடியவில்லை.

558
00:31:47,449 --> 00:31:48,575
உங்களுக்கு என்ன வயசு?

559
00:31:48,659 --> 00:31:49,743
இருபத்தி ஒண்ணு.

560
00:31:50,285 --> 00:31:51,662
உங்களுக்குப் பிடிச்ச ஃப்ளைட் எது?

561
00:31:52,913 --> 00:31:54,498
போயிங் 707.

562
00:31:54,581 --> 00:31:58,043
- ஏன்?
- ஏன்னா அது அழகானது, அப்புறம் ரொம்ப வேகமானது.

563
00:31:58,836 --> 00:31:59,962
சூப்பர்.

564
00:32:00,045 --> 00:32:01,213
உங்களுக்குப் பாய்ஃப்ரெண்டு இருக்கா?

565
00:32:02,297 --> 00:32:03,841
இருந்தது. ஆனால் இப்ப பிரிஞ்சிட்டோம்.

566
00:32:05,175 --> 00:32:06,677
என் அம்மா ஒரு நடிகை, தெரியுமா?

567
00:32:06,760 --> 00:32:08,136
உண்மையாவா?

568
00:32:08,220 --> 00:32:10,889
யாரையாவது கவர வேண்டுமெனில்
இந்த வரியை நான் சொல்வதுண்டு.

569
00:32:11,390 --> 00:32:12,724
கேட்க சுவாரஸ்யமா இருக்கு.

570
00:32:12,808 --> 00:32:14,852
ஆமா, நாங்க ஹாலிவுட்டுக்குப் போறோம்.

571
00:32:14,935 --> 00:32:16,019
அவங்க அம்மாவை கூப்பிட்டிருக்காங்க.

572
00:32:16,103 --> 00:32:19,273
அவங்க பால் நியூமன் கூட
படம் பண்றாங்கன்னு நினைக்கிறேன்.

573
00:32:19,898 --> 00:32:21,066
பால் நியூமனா, உண்மையாவா?

574
00:32:21,942 --> 00:32:23,318
ஓ, என்னால நம்ப முடியல.

575
00:32:24,653 --> 00:32:26,363
ம், நான் இப்ப போகணும்.

576
00:32:26,446 --> 00:32:27,614
அம்மா ஏதோ வேணும்னு சொன்னாங்க.

577
00:32:27,698 --> 00:32:28,949
சரி.

578
00:32:29,032 --> 00:32:30,617
கடவுளே. நான் ஏன் பொய் சொன்னேன்?

579
00:32:30,701 --> 00:32:31,910
முட்டாள்தனம்.

580
00:32:32,452 --> 00:32:35,080
அவள் நடிகை என்று கேட்டதுமே ஆச்சரியப்பட்டாள்.

581
00:32:39,918 --> 00:32:42,296
கேன்சஸ் சிட்டி விமான நிலையம்
சுவாரஸ்யமாக இருக்கவில்லை.

582
00:32:42,379 --> 00:32:43,505
கேன்சஸ் சிட்டி

583
00:32:43,589 --> 00:32:44,840
இந்த பொம்மை கடையைத் தவிர.

584
00:32:46,008 --> 00:32:47,843
கடவுளே. கடவுளே.

585
00:32:48,844 --> 00:32:53,182
ஏறக்குறைய நாங்கள் வந்திருக்கும் விமானத்தைப் போன்று
உள்ள ஒரு பாட்டரி பொம்மை கார் அங்குள்ளது.

586
00:33:00,105 --> 00:33:02,733
இது வரை உருவாக்கியதிலேயே மிகச் சிறந்த
பொம்மை அது தான், நிகரில்லாதது.

587
00:33:05,611 --> 00:33:08,071
கதவு திறக்கிறது, பயணிகள் மறைந்து போகின்றனர்,

588
00:33:08,906 --> 00:33:10,699
விமான பணிப்பெண் தோன்றுகிறாள்.

589
00:33:10,782 --> 00:33:12,159
கடவுளே.

590
00:33:12,743 --> 00:33:13,952
கதவு மூடுகிறது,

591
00:33:14,828 --> 00:33:16,038
பயணிகள் மீண்டும் தோன்றுகின்றனர்.

592
00:33:17,289 --> 00:33:19,458
எஞ்சின்கள் துவங்குகின்றன, ஒவ்வொன்றாக.

593
00:33:20,083 --> 00:33:22,252
கடவுளே. அது நகர்ந்து செல்கிறது.

594
00:33:25,339 --> 00:33:28,884
இந்தத் தருணத்தில் வாழ்க்கை மிக நன்றாக இருந்தது,
அதிலிருந்து வெளியே வருவது கடினமாக இருக்கும்.

595
00:33:28,967 --> 00:33:30,802
- ஆக இது 12.95 டாலர். வரியையும் சேர்த்து.
- சரி.

596
00:33:30,886 --> 00:33:32,095
சரி, நான் பில் போடுறேன்.

597
00:33:32,179 --> 00:33:33,180
சரி. நல்லது.

598
00:33:34,973 --> 00:33:36,517
நான் அந்த விமானத்தை
உடைக்கும் வரையில்.

599
00:33:39,353 --> 00:33:40,979
நான் ஒரு மணி நேரத்துக்கு அழுவதை நிறுத்தவில்லை,

600
00:33:41,063 --> 00:33:43,607
டென்வர்க்கு செல்லும் வழியில் விமானம் கிளம்பும்
நேரம் உட்பட.

601
00:33:44,525 --> 00:33:45,943
இந்தப் பிரிவு தான் எங்களது
நெடுந்தூர பயணமாக இருக்கும்,

602
00:33:46,026 --> 00:33:48,570
நான்கு மணிநேரத்துக்கும் குறைவாக,
எதிர்காற்று காரணமாக.

603
00:33:50,447 --> 00:33:51,698
என்னாச்சு?

604
00:33:51,782 --> 00:33:53,075
என்னோட விமானம் உடைஞ்சுடுச்சு.

605
00:33:55,994 --> 00:33:57,454
ம், நிஜ விமானங்களும் உடையும், தெரியுமா?

606
00:33:58,330 --> 00:33:59,498
அப்படியா?

607
00:33:59,581 --> 00:34:00,707
ஆமா, நிச்சயமா உடையும்.

608
00:34:02,084 --> 00:34:04,127
ம், அது எனக்குத் தெரியாது.

609
00:34:04,211 --> 00:34:07,214
டோரிஸ் அதைச் சொன்னது
என்னுடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியது.

610
00:34:07,297 --> 00:34:09,675
ஏதோ காரணத்துக்காக, பொருட்கள் ஏதாவது
கச்சிதமாக இல்லாததைப் பார்த்தால்

611
00:34:09,757 --> 00:34:10,967
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,

612
00:34:11,051 --> 00:34:12,844
அதிலும் மெக்கானிக்கல் பொருட்கள்.

613
00:34:12,928 --> 00:34:16,681
ஆனால் அவளிடம் பதில் இருந்தது,
அதை நான் இன்றளவும் பயன்படுத்துகிறேன்.

614
00:34:16,764 --> 00:34:18,433
நிஜமான பொருட்களும் உடையும்.

615
00:34:18,516 --> 00:34:20,853
நீ தூங்குறதுக்கு நான் அந்தப் பெர்த்தை
ரெடி பண்ணி தரட்டுமா?

616
00:34:20,936 --> 00:34:21,937
சரி!

617
00:34:22,020 --> 00:34:24,481
டோரிஸ், நன்றி, ஆனால் அது அவசியமில்ல.

618
00:34:24,565 --> 00:34:26,817
- அம்மா!
- இல்ல, உண்மையில இதில பிரச்சினை இல்ல.

619
00:34:26,900 --> 00:34:28,150
அதை இப்பவே ரெடி பண்றேன்.

620
00:34:49,464 --> 00:34:51,717
ஜன்னலிலிருந்து
வானத்தைப் பார்த்துக்கொண்டு,

621
00:34:51,800 --> 00:34:53,594
இந்த பெர்த்தில் இருப்பது உற்சாகமாக இருந்தது.

622
00:34:54,261 --> 00:34:55,929
என்னால் தூங்கவே முடியவில்லை.

623
00:34:57,139 --> 00:34:59,391
கொஞ்சம் ஜாலியாக இருப்பதற்காக,
நான் விழித்திருக்கவே விரும்பினேன்,

624
00:34:59,474 --> 00:35:01,101
உணவு கூட இங்கே உட்கார்ந்து சாப்பிட விரும்பினேன்.

625
00:35:04,062 --> 00:35:06,315
- நீங்க ஒரு நடிகைன்னு உங்க பையன் சொன்னான்.
- ஆமா.

626
00:35:06,398 --> 00:35:09,359
பால் நியூமனோட நீங்க நடிக்கப் போறதுக்கு வாழ்த்துகள்.

627
00:35:09,443 --> 00:35:10,694
கேட்கவே சுவாரஸ்யமா இருக்கு.

628
00:35:11,904 --> 00:35:13,739
அவன் தப்பா புரிஞ்சிருக்கணும்.

629
00:35:13,822 --> 00:35:15,532
எந்தக் குறிப்பிட்ட படமும் இல்ல.

630
00:35:15,616 --> 00:35:18,327
அங்க ஒரு நண்பர் எனக்கு நடிக்க வாய்ப்பு
வாங்கித் தர உதவுறேன்னு சொன்னார்.

631
00:35:18,994 --> 00:35:21,997
எனக்கு பால் நியூமனை ஒரு நடிகரா
பிடிக்கும்னு அவனுக்குத் தெரியும்,

632
00:35:22,080 --> 00:35:24,750
அதனால அவன் ரெண்டையும் முடிச்சு போட்டிருக்கணும்.

633
00:35:25,417 --> 00:35:28,086
எனக்கு அவமானமாக இருந்தது,
எனக்கு வாழப் பிடிக்கவில்லை.

634
00:35:28,795 --> 00:35:31,507
லஞ்ச் கிட்டதட்ட ரெடியாயிடுச்சு, அவனுக்கு
ஏதாவது வேணுமான்னு கேட்கிறேன்.

635
00:35:31,590 --> 00:35:32,883
- நன்றி, டோரிஸ்.
- நான் வந்துடுறேன்.

636
00:35:32,966 --> 00:35:33,967
நீ ரொம்ப இனிமையா இருக்க.

637
00:35:37,304 --> 00:35:38,430
லஞ்ச் கிட்டதட்ட ரெடி.

638
00:35:38,514 --> 00:35:39,765
உனக்கு சிக்கன் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

639
00:35:39,848 --> 00:35:41,433
எனக்கு ஃப்ரைடு சிக்கன் பிடிக்கும்.

640
00:35:41,517 --> 00:35:43,644
ம், இது அது மாதிரி தான்.
ஆனால் அதை விட நல்லா இருக்கும்.

641
00:35:43,727 --> 00:35:44,728
ஓ, அப்படியா?

642
00:35:44,811 --> 00:35:46,396
அதுக்குப் பேரு சிக்கன் கார்டான் ப்ளூ.

643
00:35:47,356 --> 00:35:48,815
எனக்கு இன்னொரு கோக் கிடைக்குமா?

644
00:35:48,899 --> 00:35:50,609
கண்டிப்பா. இதோ வரேன்.

645
00:35:50,692 --> 00:35:51,693
சரி.

646
00:36:00,953 --> 00:36:04,081
நான் 7D என ஊகிக்கும்
இருக்கையில் அமர்ந்திருப்பவர்

647
00:36:04,164 --> 00:36:06,834
நிறைய குடித்துக்கொண்டு, பால் மால்ஸ் சிகரெட்
புகைத்துக்கொண்டிருந்தார்,

648
00:36:06,917 --> 00:36:10,420
அது ஃபில்டர் இல்லாத கடுமையான சிகரெட்
என்று அம்மா சொல்வதுண்டு.

649
00:36:10,504 --> 00:36:12,297
நியூபோர்ட்ஸ் அந்த அளவு கடுமையானது கிடையாது.

650
00:36:12,923 --> 00:36:16,093
எதுவோ, அவர் "த கேன்சஸ் சிட்டி ஸ்டார்"
என்று தோன்றிய செய்தித் தாளில்,

651
00:36:16,176 --> 00:36:18,178
திரும்பத் திரும்ப தலைப்பு செய்தியைப்
பார்த்துக்கொண்டிருந்தார்.

652
00:36:18,887 --> 00:36:22,516
அதில், "பேரழிவு: ஐடில்வைல்டில் ஜெட் விமானம்
விபத்துக்குள்ளானது," என்று கூறியது.

653
00:36:22,599 --> 00:36:24,893
அதன் கீழே மங்கலான,
கறுப்பு-வெள்ளை புகைப்படமும் இருந்தது.

654
00:36:25,853 --> 00:36:29,106
விமான விபத்துகள் என்னைக் கவலைகொள்ளச்
செய்தததை விட, எனது ஆர்வத்தைத் தூண்டின.

655
00:36:29,648 --> 00:36:31,567
நான் மிகவும் நேசிக்கும் ஒன்று,

656
00:36:31,650 --> 00:36:34,736
யாரையும் காயப்படுத்தக் கூடும் என்பதையே
என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

657
00:36:34,820 --> 00:36:35,988
அதுவே அவர்களைக் கொல்லும் போது?

658
00:36:36,822 --> 00:36:39,908
பின்னர் அவர் டோரிஸ் அல்லாது வேறு ஒரு
பணிப்பெண்ணிடம் பேசுவதைக் கேட்டேன்.

659
00:36:39,992 --> 00:36:41,493
சார், நீங்க நல்லா இருக்கீங்களா?

660
00:36:46,331 --> 00:36:47,457
இல்ல.

661
00:36:49,126 --> 00:36:52,045
இதை வாசிக்க கஷ்டமா இருக்கு,
சமீபத்தில தான்,

662
00:36:52,129 --> 00:36:55,799
நான் சிகாகோவில இருந்து
நியூ யார்க்-க்கு பிசினெஸ் விஷயமாக புக் பண்ணேன்,

663
00:36:55,883 --> 00:36:59,011
ஆனால்… என்னால அந்த ஃப்ளைட்ல போக முடியல.

664
00:37:00,220 --> 00:37:04,183
நான் என்னோட சீட்டுக்காக சண்டைப் போட்டேன்,
தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

665
00:37:05,684 --> 00:37:10,814
வருத்தத்தோட வீட்டுக்குப் போனேன்.
ஆனால் நான் வீட்டுக்குப் போய்,

666
00:37:11,815 --> 00:37:14,943
டிவியை ஆன் பண்றேன்,
அதில என்னோட ஃப்ளைட் க்ராஷ் ஆயிருந்துச்சு.

667
00:37:16,111 --> 00:37:17,571
நான் போகவிருந்த ஃப்ளைட்.

668
00:37:18,822 --> 00:37:22,784
அதனால, எனக்கு… எனக்கு…
பறக்கிறதுக்கு கொஞ்சம் பயம்.

669
00:37:23,619 --> 00:37:24,745
கேட்க கஷ்டமா இருக்கு.

670
00:37:24,828 --> 00:37:28,749
ஆனால் எதுவும் நடக்காது, நாம நல்லா இருக்கோம்னு
என்னால உங்களுக்கு உறுதி தர முடியும்.

671
00:37:28,832 --> 00:37:31,043
உங்களுக்கு எது வேணும்னாலும் சொல்லுங்க,
நான் இங்க தான் இருக்கேன்.

672
00:37:32,211 --> 00:37:33,378
சரி. நல்லது.

673
00:37:34,546 --> 00:37:36,298
அவர் பயப்படுவது நியாயமே.

674
00:37:36,381 --> 00:37:39,051
ஆனால், அவர் நன்கு உணர
நான் அவருக்கு எப்படி உதவ முடியும்?

675
00:37:39,134 --> 00:37:40,385
என்னுடைய விமானம் உடைந்திருக்கிறது.

676
00:37:40,469 --> 00:37:42,846
அதைப் பார்த்தாலே அவர் பயந்து போய்விடுவார்.

677
00:37:43,847 --> 00:37:45,891
உடனே எனக்கு ஒரு சிறந்த யோசனை தோன்றியது.

678
00:37:45,974 --> 00:37:47,809
ஒருவேளை கேப்டனால் இதைச் சரிசெய்ய முடியலாம்.

679
00:37:47,893 --> 00:37:49,061
அதான், என் பொம்மை விமானத்தை.

680
00:37:52,314 --> 00:37:53,774
உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?

681
00:37:53,857 --> 00:37:55,526
இப்ப இல்ல.

682
00:37:56,360 --> 00:37:57,444
இப்ப தான் டைவர்ஸ் ஆச்சு.

683
00:37:59,029 --> 00:38:00,739
இது தற்செயலான விஷயம் அல்லவா?

684
00:38:01,406 --> 00:38:02,991
என் அம்மா ஒரு நடிகை.

685
00:38:03,909 --> 00:38:05,994
தற்செயலாக நடப்பது என்பது குறித்து
எனக்குத் தெரியாது.

686
00:38:06,578 --> 00:38:07,496
அவர் சரி செய்துவிட்டார்.

687
00:38:07,996 --> 00:38:09,331
கடவுளே, அவர் தான் சிறந்தவர்.

688
00:38:09,414 --> 00:38:11,041
அவர் ஏன் என் அம்மாவை
திருமணம் முடித்துக்கொள்ளக் கூடாது?

689
00:38:13,377 --> 00:38:14,461
நன்றி!

690
00:38:14,545 --> 00:38:17,422
என் அம்மா, ஒரு படத்தில நடிக்கிறாங்க,

691
00:38:17,506 --> 00:38:21,051
கூட, கர்க் டக்ளஸும், எலிஸபெத் டேய்லரும்
நடிக்கிறதா சொன்னாங்கன்னு நினைக்கிறேன்.

692
00:38:23,762 --> 00:38:24,972
அப்புறம் பால் நியூமனும்.

693
00:38:25,722 --> 00:38:27,724
உண்மையாவா? பால் நியூமனா?

694
00:38:28,559 --> 00:38:31,353
- பரவாயில்லையே.
- சரி, நான் இப்ப போகணும்.

695
00:38:31,979 --> 00:38:33,188
நன்றி.

696
00:38:37,109 --> 00:38:38,360
ஹாய், செல்லம்.

697
00:38:38,443 --> 00:38:40,153
கேப்டன் ஃப்ளைட்டைச் சரிசெய்துட்டார்.

698
00:38:40,237 --> 00:38:42,489
- அவர் ரொம்ப நல்லவர்.
- ஓ, நல்லது.

699
00:38:42,573 --> 00:38:44,116
ரொம்ப சந்தோஷம், செல்லம்.

700
00:38:44,199 --> 00:38:46,243
அவள் உண்மையில் சந்தோஷமாக இருந்தாள்,
ஏன் என்று எனக்குத் தெரியும்.

701
00:38:46,326 --> 00:38:48,871
அவளுக்கு முன்னால் புதிய நாப்கின்
வைக்கப்பட்டிருந்தது,

702
00:38:48,954 --> 00:38:52,165
ஆதோடு அழகிய சைனா பாத்திரங்களும்,
வெள்ளி பாத்திரங்களும் இருந்தன.

703
00:38:52,249 --> 00:38:53,792
கடவுளே.

704
00:38:56,920 --> 00:38:57,963
லெனக்ஸ்.

705
00:38:59,715 --> 00:39:02,718
மத்தவங்களுக்கு முன்னால பிளேட்டை திருப்புறது
நல்ல வழக்கமில்ல.

706
00:39:03,343 --> 00:39:06,180
என் அம்மாவுக்கு பழம்பொருட்களும்,
விலையுயர்ந்த சைனா பாத்திரங்களும் பிடிக்கும்.

707
00:39:07,097 --> 00:39:10,517
அவள் மெனுவை சத்தமாக வாசிக்கத் தொடங்கினாள்,
அவளுக்கு எப்போதும் அந்த பழக்கம் உண்டு.

708
00:39:10,601 --> 00:39:13,020
அதுவும் கம்பீரமான, நாடகக் குரலில்.

709
00:39:13,103 --> 00:39:15,147
அப்படி உணவகங்களில் செய்யும் போது,
எனக்குச் சங்டமாக இருக்கும்.

710
00:39:15,230 --> 00:39:18,567
"உங்களுக்கான ஆப்பிடைஸர் தேர்வுகள்:
ஷ்ரிம்ப் காக்டெயில்

711
00:39:18,650 --> 00:39:20,652
அல்லது நண்டு கறியுடன் பொதியப்பட்ட காளான்.

712
00:39:21,570 --> 00:39:23,822
மெயின் கோர்ஸுக்கு, ஜூஸ் உடன் ஃபீப்,

713
00:39:24,448 --> 00:39:26,700
- அல்லது சிக்கன் கார்டான் ப்ளூ."
- சிக்கன் கார்டான் ப்ளூ.

714
00:39:33,290 --> 00:39:35,501
நான் திரும்ப
எனது சிறிய புகலிடத்திற்குச் சென்றேன்,

715
00:39:35,584 --> 00:39:36,919
எனக்கான தனிப்பட்ட உலகத்திற்கு.

716
00:39:37,586 --> 00:39:43,175
நல்லதொரு வாழ்க்கை

717
00:39:44,551 --> 00:39:50,349
வேடிக்கை நிறைந்து
கச்சிதமானதாகத் தோன்றுகிறது

718
00:39:51,183 --> 00:39:52,184
நன்றி.

719
00:39:54,895 --> 00:39:58,357
நல்லதொரு வாழ்க்கை

720
00:39:58,440 --> 00:40:04,363
நீங்கள் உணரும் கவலையை
மறைத்திட அனுமதிக்கும்…

721
00:40:08,867 --> 00:40:10,911
கீழே குனிந்து என் அம்மா
உட்கார்ந்திருக்கும் இடத்தைப் பார்க்கையில்,

722
00:40:11,453 --> 00:40:13,789
இந்த வருடம் என் பிறந்தநாளுக்கு நாங்கள்
என்ன செய்யப் போகிறோமென வியந்தேன்.

723
00:40:14,373 --> 00:40:17,668
நான் சிறியவனாக இருந்த போது, எனது ஐந்தாவது
பிறந்தநாளை நினைத்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது.

724
00:40:17,751 --> 00:40:21,046
அது வெற்றிகரமாக அமைந்ததால், ஒவ்வொரு நாளும்
ஒரு பார்ட்டி வேண்டும் என்று விரும்பினேன்.

725
00:40:21,755 --> 00:40:23,966
என் அம்மாவும் ஒரு ஐந்து நாட்கள் வரை சம்மதித்தார்.

726
00:40:24,550 --> 00:40:26,301
பின்னர் நான் அந்த கசப்பான உண்மையைத்
தெரிந்து கொண்டேன்,

727
00:40:26,385 --> 00:40:29,137
வழக்கமாக பிறந்தநாட்கள்
ஒரு நாளைக்குத் தான் நீடிக்கும் என்று.

728
00:40:29,805 --> 00:40:32,641
ஆனால் அதை நான் ஒவ்வொரு மாதமும்
கொண்டாட முடியாது என்று யாரும் சொல்லவில்லை.

729
00:40:32,724 --> 00:40:34,268
ஒரு முறை ஏப்ரல் மாதத்தில்,

730
00:40:34,351 --> 00:40:37,688
என் பிறந்தநாட்களில் ஒன்றிற்கு
என் அம்மாவின் நண்பர் ஒருவர் வந்து,

731
00:40:37,771 --> 00:40:39,439
"இவனது பிறந்தநாள் பிப்ரவரியில் அல்லவா?"
என்று கேட்டார்.

732
00:40:39,523 --> 00:40:42,025
"ஆம்," என்று என் அம்மா கூறி, "ஆனால்
அவன் சந்தோஷத்தை கெடுத்துவிட வேண்டாம்," என்றாள்.

733
00:40:42,693 --> 00:40:44,194
அந்த வகையில் என் அம்மா நல்லவள்.

734
00:40:45,028 --> 00:40:47,114
- நன்றி.
- பரவாயில்ல.

735
00:40:48,365 --> 00:40:50,075
நான் அப்படியே பக்கவாட்டில் படுத்தேன்.

736
00:40:50,158 --> 00:40:53,203
எஞ்சின்களின் உறுமல்
என்னைத் தாலாட்டுவது போல இருந்தது.

737
00:40:53,287 --> 00:40:55,706
என்னை அறியாமலேயே நான் தூங்கிப் போனேன்.

738
00:40:55,789 --> 00:40:57,249
அதிலிருந்து பல வருடங்களுக்கு,

739
00:40:57,332 --> 00:40:59,168
இப்படிப்பட்ட உறக்கம் கிடைப்பதற்கு,

740
00:40:59,251 --> 00:41:02,921
எனக்கு நேரம் இருக்கும் பட்சத்தில், பறப்பதற்கு
ஒரு புரொப்பலர் விமானத்தைக் கண்டுப்பிடிக்க,

741
00:41:03,005 --> 00:41:04,965
என்னுடைய விமான அட்டவணைகளை
திருப்பித் திருப்பிப் பார்ப்பதுண்டு.

742
00:41:05,048 --> 00:41:09,428
நீங்கள் ஏன் என வியப்பதாக இருந்தால்…

743
00:41:09,511 --> 00:41:12,264
இப்ப, பெல்ட் போட்டிருக்கிற வரை
இங்க இருக்கலாம், சரியா?

744
00:41:12,347 --> 00:41:13,724
- சரி.
- நல்லது.

745
00:41:13,807 --> 00:41:15,726
நான் உங்கள் கேப்டன் பேசுகிறேன்.

746
00:41:15,809 --> 00:41:18,729
அடுத்த 20 நிமிடங்களுக்கு மிதமான
காற்று அதிர்வினை எதிர்பார்க்கிறோம்.

747
00:41:18,812 --> 00:41:21,440
தயவுசெய்து உங்கள் இருக்கையில் அமர்ந்து
ம், உங்கள் சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ளுங்கள்.

748
00:41:21,523 --> 00:41:24,276
விமானம் அதிரவும், ஆடவும் துவங்கியது.

749
00:41:24,359 --> 00:41:27,946
நாங்கள் வானிலையைத் தாண்டி எழும்ப துவங்க,
எஞ்சின் சத்தத்தின் ஸ்ருதி மாறியது.

750
00:41:28,697 --> 00:41:30,908
இருப்பினும், காற்று அதிர்வு மோசமடைந்தது,

751
00:41:30,991 --> 00:41:33,160
பயணிகளில் சிலர்
சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தனர்,

752
00:41:33,243 --> 00:41:36,663
ஏதோ அவர்கள் பார்க்கக் கூடிய ஒன்று
இந்த பிரச்சினையைத் தீர்த்து விடுவது போல.

753
00:41:38,373 --> 00:41:40,292
12A இருக்கையில் இருந்தவர் எழுந்து,

754
00:41:40,375 --> 00:41:42,127
விசித்திரமாக விமானத்தின் பின்பக்கமாக நகர்ந்தார்.

755
00:41:42,211 --> 00:41:43,212
உங்களுக்கு ஒண்ணுமில்லையே?

756
00:41:43,295 --> 00:41:44,588
அவர் எங்கோ பார்த்து கத்தினார்.

757
00:41:44,671 --> 00:41:46,006
என்னைப் பின்தொடர்வதை நிறுத்து!

758
00:41:47,424 --> 00:41:48,759
சார்? சார், உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா?

759
00:41:48,842 --> 00:41:51,428
எனக்குத் தெரியாத அந்த
விமான பணிப்பெண் அவர் பின்னால் ஓடினாள்.

760
00:41:51,512 --> 00:41:53,805
- சார், ஏதாவது உதவி வேணுமா? பரவாயில்ல.
- என்னவொரு விசித்திரமான காட்சி.

761
00:41:53,889 --> 00:41:56,475
அந்த இளம்பெண்ணின் குரல்வளையைச் சுற்றி
அவரின் கைகள் இருந்தன,

762
00:41:56,558 --> 00:41:58,977
அவளும் தனது கைகளை
அவரது குரல்வளையைச் சுற்றி வைத்திருந்தாள்.

763
00:41:59,770 --> 00:42:02,105
இருவருக்கும் இடையே உண்மையான எதிர்ப்பு இருந்தது.

764
00:42:02,189 --> 00:42:03,232
எனக்குப் புரியுது. எனக்கும் நடந்திருக்கு.

765
00:42:03,315 --> 00:42:05,776
ஆனால் அவர்கள் ஒரு சகஜமான உரையாடலில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

766
00:42:05,859 --> 00:42:07,861
கண்ணுக்குத் தெரிவதைக் காட்டிலும்,
அவரது இயல்பு வேறாக இருந்தது.

767
00:42:07,945 --> 00:42:09,446
- ஒரு பிரச்சினை.
- மூச்சை வெளிய விடுங்க.

768
00:42:09,530 --> 00:42:10,614
நன்றி.

769
00:42:10,697 --> 00:42:12,783
எங்கள் அனைவருக்கும் முன்பாக
அவர் உள்ளே ஏறிய போது,

770
00:42:12,866 --> 00:42:15,369
அவருக்கு மயக்க மருந்து கொடுத்து
அவரை உறங்க வைத்திருக்க வேண்டும்.

771
00:42:15,452 --> 00:42:18,997
அவரை டென்வரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு
மாற்றுகிறார்கள் போல.

772
00:42:19,081 --> 00:42:20,290
ரொம்ப நன்றி.

773
00:42:20,374 --> 00:42:21,917
- பதட்டப்படாதீங்க.
- சாரி.

774
00:42:22,000 --> 00:42:23,502
உங்களுக்கு ஏதாவது வேணும்னா, சொல்லுங்க.

775
00:42:23,585 --> 00:42:25,587
மிகவும் சாந்தமான முறையில்
அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

776
00:42:25,671 --> 00:42:27,673
எதுவும் பிரச்சினை
என்று நம்புவது கடினமாக இருந்தது.

777
00:42:28,465 --> 00:42:30,592
எல்லோருமாக சேர்ந்து அவரை அமைதிப்படுத்தினர்.

778
00:42:31,218 --> 00:42:33,846
இருந்தும் நாங்கள் கீழே இறங்கும் வரை
எல்லோரும் பதட்டமாகவே இருந்தனர்.

779
00:42:33,929 --> 00:42:37,015
- உட்காருங்க, சரியா?
- ம், நான் நல்லா இருக்கேன்.

780
00:42:41,228 --> 00:42:44,481
டென்வர்

781
00:42:47,234 --> 00:42:49,152
பால் நியூமன் படத்துக்கு வாழ்த்துகள்.

782
00:42:52,406 --> 00:42:53,907
நன்றி.

783
00:42:53,991 --> 00:42:54,992
எனக்கு அந்த வாழ்த்துகள் தேவை.

784
00:42:57,327 --> 00:42:58,996
நம்ம ஃப்ளைட் ஏன் ரிப்பேர் ஆச்சு?

785
00:42:59,079 --> 00:43:01,331
தெரியல, செல்லம்,

786
00:43:01,415 --> 00:43:02,624
ஆனால் பரவாயில்ல.

787
00:43:02,708 --> 00:43:04,459
நாம ராத்திரி நிம்மதியா தூங்கலாம்.

788
00:43:04,543 --> 00:43:08,338
நாளைக்கு பயணம் நல்லா இருக்கும்.

789
00:43:09,506 --> 00:43:11,800
நாம சேர்ந்து ஒரு நாடகத்தைப் படிக்கலாமா?

790
00:43:12,509 --> 00:43:16,930
நாம "ஃபிலடெல்ஃபியா ஸ்டோரி"-ஐப்
படிக்கணும்னு நினைக்கிறேன்.

791
00:43:17,014 --> 00:43:18,390
- சரி.
- சரி.

792
00:43:19,641 --> 00:43:21,852
உண்மையில், டென்வரில்
தங்கியிருப்பது வேடிக்கையாக இருந்தது.

793
00:43:21,935 --> 00:43:24,855
அன்றிரவு, அம்மா நாடகத்தில்
இரண்டு பகுதிகளை படித்தார்.

794
00:43:24,938 --> 00:43:26,273
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து,

795
00:43:26,356 --> 00:43:29,151
குழந்தைகள் கதைகளுக்குப் பதிலாக, இரவில்
அம்மா எனக்கு நாடகங்கள் வாசிப்பதுண்டு.

796
00:43:32,571 --> 00:43:34,907
டென்வர் டெர்மினல் உணவகத்தில்
நாங்கள் மதிய உணவிற்குச் சென்றோம்.

797
00:43:35,490 --> 00:43:38,535
வந்து போகும் விமானங்களைப் பார்த்துக்கொண்டே.
க்ரில்ட் சீஸ், கோக் எடுத்துக்கொண்டிருந்தேன்.

798
00:43:39,786 --> 00:43:41,121
மிக அருமையாக இருந்தது.

799
00:43:41,205 --> 00:43:43,832
இது வரை நடந்ததை விட வேறு என்ன
சிறப்பாக இருந்து விட போகிறது?

800
00:43:43,916 --> 00:43:44,958
எதுவுமில்லை.

801
00:43:45,042 --> 00:43:46,376
நான் நிரந்தரமாக வாழ விரும்பினேன்.

802
00:43:46,919 --> 00:43:49,254
- உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.
- நன்றி. பயணத்துக்கு வாழ்த்துகள்.

803
00:43:50,297 --> 00:43:54,134
ஹாய், இதில நீங்கள் படிக்கிறதுக்கு
ஒரு குறிப்பு இருக்கு.

804
00:43:55,511 --> 00:43:57,054
ஆமா, லிஸ் இதைப் பத்தி சொன்னா.

805
00:43:57,137 --> 00:43:58,847
பொறுங்க! நாம தவறான கேட்ல இருக்கோம்!

806
00:43:58,931 --> 00:44:00,474
அம்மா, நாம ஃப்ளைட்டை தவறவிடப் போறோம்!

807
00:44:00,557 --> 00:44:02,059
இந்த ஃப்ளைட் இல்லம்மா. சொல்றதைக் கேளுங்க!

808
00:44:02,142 --> 00:44:04,436
இது LA-க்கான நான்-ஸ்டாப் ஃப்ளைட்.

809
00:44:04,520 --> 00:44:05,729
எனக்கு மனப்பாடமாகத் தெரியும்.

810
00:44:05,812 --> 00:44:09,233
ஸ்டார்ஸ்ட்ரீம் போயிங் 707
ராயல் அம்பாஸிடர் சேவை.

811
00:44:09,316 --> 00:44:11,527
- நன்றி. அதை என்கிட்ட கொடுங்க.
- பயணத்துக்கு வாழ்த்துகள்.

812
00:44:11,610 --> 00:44:12,736
நன்றி.

813
00:44:12,819 --> 00:44:14,530
சர்ப்ரைஸ், செல்லம்.

814
00:44:14,613 --> 00:44:17,407
நாம ஜெட் ஃப்ளைட்ல போறோம்.

815
00:44:18,700 --> 00:44:19,952
என்ன?

816
00:44:20,953 --> 00:44:22,204
என்னால நம்ப முடியல.

817
00:44:22,287 --> 00:44:24,373
நாம LA-க்கு 707 ஃப்ளைட்ல போறோம்.

818
00:44:28,377 --> 00:44:29,795
உனக்கு உற்சாகமா இல்லையா, செல்லம்?

819
00:44:30,546 --> 00:44:32,548
இது லிஸ்ஸிடமிருந்து உனக்கான சர்ப்ரைஸ்.

820
00:44:36,218 --> 00:44:37,261
என்ன ஆச்சு, செல்லம்?

821
00:44:37,344 --> 00:44:39,763
ஒண்ணுமில்ல, அது வந்து…

822
00:44:39,847 --> 00:44:43,392
ம், நாம அங்க போனதும், நீங்க பந்தா பண்ணப் போறீங்க.

823
00:44:49,481 --> 00:44:52,067
சரி, நாம கேட்டுக்குப் போகலாம், சரியா?

824
00:44:54,027 --> 00:44:55,195
நான் உண்மையில் உற்சாகமாக இருந்தேன்.

825
00:44:55,279 --> 00:44:57,865
ஆனால் சில சமயம் அதை எப்படி வெளிப்படுத்துவது
என்று எனக்குத் தெரியவில்லை.

826
00:45:00,367 --> 00:45:02,452
ஒரு வகையில் எதையோ இழந்தது போல இருந்தது.

827
00:45:04,371 --> 00:45:07,165
ஒருவேளை அந்த பெரிய, பழைய விமானத்துக்கு
குட்பை சொல்வதாக இருக்கலாம்,

828
00:45:07,666 --> 00:45:09,710
அல்லது மீண்டும் டோரிஸைக் காணப் போவதில்லை
என்பதாக இருக்கலாம்.

829
00:45:12,171 --> 00:45:14,923
அவள் எதுவும் சொல்லவில்லை,
நான் மோசமாக உணர்ந்தேன்.

830
00:45:21,013 --> 00:45:24,433
அதோ.
ஒரு விமானம் என்றால் அப்படி தான் இருக்க வேண்டும்.

831
00:45:25,601 --> 00:45:27,895
அது கலைவடிவம். நம்புங்கள், அது கலைவடிவம்.

832
00:45:36,904 --> 00:45:39,990
நான் ஜெட் விமானத்தில், முதல் வகுப்பில் இருந்தேன்.

833
00:45:40,866 --> 00:45:42,075
என்னால் நம்பவே முடியவில்லை.

834
00:45:43,076 --> 00:45:44,912
நான் தனியாக உட்காரலாம் என்று என் அம்மா கூறினார்.

835
00:45:44,995 --> 00:45:47,331
அப்படியாக நான் தனியாகப் போவதாகப்
பாவித்துக்கொள்ளலாம் என்றாள்.

836
00:45:47,414 --> 00:45:49,958
அவள் பார்பரா எனும் ஒரு அருமையான பெண்ணுடன்
உட்கார முடிவு செய்தாள்.

837
00:46:02,846 --> 00:46:05,224
ஒரு சக்தியின் பெருக்கம்
என்னை இருக்கையின் பின்னுக்குத் தள்ளியது.

838
00:46:21,323 --> 00:46:23,450
வாவ். அற்புதம்.

839
00:46:23,534 --> 00:46:25,202
அது அற்புதமாக இருந்தது.

840
00:46:25,285 --> 00:46:26,662
அப்படியே வானில் எழும்பிச் சென்றோம்.

841
00:46:28,455 --> 00:46:30,791
நாங்கள் அறியும் முன்பு
கொலராடோ மலைகளின் மேல் இருந்தோம்.

842
00:46:31,375 --> 00:46:35,754
மதிய ஒளியில் அந்த மின்னும் பனிப் படர்ந்த மலைகள்
மறக்க முடியாதவை.

843
00:46:37,464 --> 00:46:40,300
சமநிலை அடைந்ததும்,
ஸ்பீக்கரில் கேப்டன் வந்து பேசினார்.

844
00:46:40,884 --> 00:46:43,595
மக்களே,
ஜெட் யுகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

845
00:46:43,679 --> 00:46:48,559
நாம் மணிக்கு 600 மைல் வேகத்தில்,
33,000 அடி உயரத்தில் பறக்கிறோம்.

846
00:46:48,642 --> 00:46:52,896
லாஸ் ஏஞ்சலஸிற்கு நமது பயண நேரம்
ஒரு மணிநேரம் 52 நிமிடங்களாக இருக்கும்.

847
00:46:52,980 --> 00:46:55,232
அதனால் நிதானித்து, பயணத்தை ரசித்திடுங்கள்.

848
00:46:55,315 --> 00:46:56,733
உங்களுக்கு ஷாம்பெயின் தருகிறேன்.

849
00:47:02,447 --> 00:47:04,533
பார்பரா அம்மாவை விட வயதில் சற்றே மூத்தவள்,

850
00:47:04,616 --> 00:47:07,244
ஆனால் ரொம்ப அழகு,
அப்படியே என் அம்மா விரும்பும் வண்ணம்,

851
00:47:07,327 --> 00:47:09,580
நவீனமான, பணக்கார பெண், அந்நிய உச்சரிப்பு இல்லாமல்.

852
00:47:10,330 --> 00:47:11,415
இல்ல, இல்ல.

853
00:47:11,498 --> 00:47:14,543
துரதிஷ்டவசமா, என் கணவர்
பல வருஷங்களுக்கு முன்னால இறந்துட்டார்.

854
00:47:14,626 --> 00:47:17,629
அவர் பேர் ஹென்றி, அவர்…

855
00:47:17,713 --> 00:47:19,047
ஒ, நான் அந்தக் கதையைச் சொல்றேன்.

856
00:47:19,131 --> 00:47:24,052
க்ராக்கர் வங்கி ப்ரெஸிடென்ட் பதவியை
மேடையில வச்சு ஏற்கும் போது,

857
00:47:24,136 --> 00:47:25,971
- அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுச்சு.
- கடவுளே.

858
00:47:26,054 --> 00:47:28,140
- ஓ, பார்பரா.
- நாற்பத்து மூணு வயசு.

859
00:47:29,057 --> 00:47:31,018
நான் கேபினைச்
சுற்றி வர முடிவு செய்தேன்.

860
00:47:33,896 --> 00:47:35,939
நான் கொஞ்சம் கெத்தாகவே நடந்துச் சென்றேன்.

861
00:47:36,523 --> 00:47:38,567
நாம் உண்மையில்
ஏதோ சிறப்பான ஒன்றைச் செய்கிறோம் என்று

862
00:47:38,650 --> 00:47:40,819
அறிந்த ஒரு எட்டு வயது சிறுவனால் மட்டும்
செய்யக்கூடிய வகையில்.

863
00:47:51,538 --> 00:47:53,540
நடைபாதையின் பின்னே,
இடது பக்கம் பார்க்கையில்,

864
00:47:53,624 --> 00:47:55,083
அங்கு ஒரு சிறுவனைக் கண்டேன்.

865
00:47:55,751 --> 00:47:57,294
எனக்கு இளையவன்.

866
00:47:57,377 --> 00:47:58,879
ஒரு இரண்டு வருடம் என்று சொல்லலாம்.

867
00:47:59,713 --> 00:48:03,759
அவன் கையில் அதிகாரப்பூர்வ விமான வழிகாட்டி
அல்லது OAG இருந்தது,

868
00:48:03,842 --> 00:48:06,512
அது டிராவல் ஏஜென்ட்கள் மற்றும்
பெரிய நிறுவனங்களிடம் மட்டுமே இருக்கும்.

869
00:48:06,595 --> 00:48:08,555
அது சமீபத்திய OAG-ஆ?

870
00:48:09,306 --> 00:48:11,934
யாருக்கும் கிடைக்கிறதுக்கு முன்னால
எங்க அப்பாவுக்கு போஸ்ட்ல வந்துடும்.

871
00:48:12,017 --> 00:48:14,144
அட, நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.

872
00:48:14,728 --> 00:48:15,896
இதோ வந்துடுறேன்.

873
00:48:17,981 --> 00:48:19,191
அம்மா, எனக்கு புதுசா
ஒரு சிறந்த நண்பன் கிடைச்சிருக்கான்!

874
00:48:19,274 --> 00:48:21,193
- அவன்கிட்ட OAG இருக்கு. கடவுளே…
- ஓ, ஜெஃப், செல்லம்.

875
00:48:21,276 --> 00:48:22,569
ஜெஃப், இது பார்பரா.

876
00:48:22,653 --> 00:48:26,281
இவங்க அப்பா ஒரு விமான நிறுவனம்
சொந்தமா வச்சிருக்கார்.

877
00:48:26,365 --> 00:48:28,784
டிரான்ஸ் கரீபியன் ஏர்லைன்ஸ்.

878
00:48:28,867 --> 00:48:30,327
- உண்மையாவா?
- ஆமா.

879
00:48:30,410 --> 00:48:33,664
அதோட, என்னோட பேர், பார்பராவை,

880
00:48:33,747 --> 00:48:37,709
அவர் ஒரு புத்தம் புது DC-8 ஜெட்லைனர்
மூக்கில எழுதியிருக்கார்.

881
00:48:37,793 --> 00:48:39,962
வாவ். அருமை.

882
00:48:40,629 --> 00:48:42,422
அவள் பெயருடன் ஒரு விமானம்.

883
00:48:43,465 --> 00:48:47,886
நான் இங்கே இருப்பதா அல்லது
என்னுடைய புது சிறந்த நண்பன், ஸ்கிப்பரிடம் போவதா?

884
00:48:50,806 --> 00:48:51,807
இந்தக் காலத்துப் பிள்ளைகள்.

885
00:48:52,933 --> 00:48:55,561
அடுத்த ஒரு மணி நேரம்
ஸ்கிப்பரும், நானும் மட்டுமே ரசிக்கும்

886
00:48:55,644 --> 00:48:57,729
உரையாடலுடன் நிறைந்திருந்தது.

887
00:48:57,813 --> 00:49:01,233
லண்டனிலிருந்து சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு இடையில
1960-ல 22 மணி நேரம் எடுத்த,

888
00:49:01,316 --> 00:49:06,363
ஒரு நான்-ஸ்டாப் ஃப்ளைட்
TWA கிட்ட இருந்தது தெரியுமா?

889
00:49:06,446 --> 00:49:07,948
வாவ், உண்மையாவா?

890
00:49:08,782 --> 00:49:10,826
என் நண்பர்களில் யாருக்கும்
விமானங்கள் பற்றித் தெரியாது.

891
00:49:10,909 --> 00:49:11,994
ஆனால் எனக்கு இப்போது ஸ்கிப்பர் இருக்கிறான்.

892
00:49:12,077 --> 00:49:14,204
- உங்க அப்பா எங்க?
- அங்க.

893
00:49:14,288 --> 00:49:15,372
அவர் என்ன பண்றார்?

894
00:49:15,455 --> 00:49:17,249
- அவர் ஒரு லாயர்.
- உங்க அம்மா எங்க?

895
00:49:17,332 --> 00:49:19,334
ஓ, நான் மூணு வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க.

896
00:49:19,960 --> 00:49:22,296
ஓ, அப்படியா?
உனக்கு ஒரு புது அம்மா இருக்காங்களா?

897
00:49:22,379 --> 00:49:25,924
இல்ல, அம்மா இறந்தப் பிறகு, அப்பா ரெண்டு முறை
திரும்ப கல்யாணம் பண்ணாங்க,

898
00:49:26,008 --> 00:49:28,177
அவங்களும் கேன்ஸர்ல இறந்திட்டாங்க.

899
00:49:28,260 --> 00:49:30,262
- எல்லாரும்.
- விளையாடுறியா?

900
00:49:31,180 --> 00:49:32,264
அவருக்கு அந்நிய உச்சரிப்பு இருக்கா?

901
00:49:32,347 --> 00:49:33,640
தெரியல. அது முக்கியமா?

902
00:49:33,724 --> 00:49:34,850
ம், ஒரு வகையில.

903
00:49:34,933 --> 00:49:36,310
அவருக்கு இல்லேன்னு நினைக்கிறேன்.

904
00:49:36,393 --> 00:49:38,270
ஓ, நல்லது. அப்ப எங்க அம்மாவுக்கு
அவரைப் பிடிக்கும்.

905
00:49:38,353 --> 00:49:40,272
அந்நிய உச்சரிப்பு இல்லாதவங்களை
எங்க அம்மாவுக்குப் பிடிக்கும்.

906
00:49:40,814 --> 00:49:42,065
ஹாலிவுட்டிற்காக.

907
00:49:42,608 --> 00:49:43,650
- நமக்காக.
- ஆமா.

908
00:49:43,734 --> 00:49:44,860
- என்னால இன்னும் நம்ப-
- அம்மா!

909
00:49:44,943 --> 00:49:46,028
எனக்கு இந்த புது சிறந்த நண்பன் கிடைச்சிருக்கான்,

910
00:49:46,111 --> 00:49:48,864
அவங்க அப்பா பணக்காரங்க, சோகமாக இருக்கார்,
அந்நிய உச்சரிப்பும் இல்ல.

911
00:49:50,449 --> 00:49:52,451
ம், நான் எந்த வரிசையில இருக்கேன்னு
அவர்கிட்ட மறக்காம சொல்லிடு.

912
00:49:54,286 --> 00:49:55,287
ஹாய்.

913
00:49:56,330 --> 00:49:57,623
நீங்க ஏன் இங்க இருக்கீங்க?

914
00:49:57,706 --> 00:50:00,584
ம், உங்களைக் கடைசியா ஒரு தரம் பார்க்கிறதுக்காக
நான் ஃப்ளைட்டை மாத்திக்கிட்டேன்.

915
00:50:01,543 --> 00:50:03,504
நான் என் முகத்தை மீண்டும்
கழுவப் போவதே இல்லை.

916
00:50:04,254 --> 00:50:05,422
இது மிகவும் நன்றாக உள்ளது.

917
00:50:05,506 --> 00:50:09,134
என் கர்ள்ஃப்ரெண்டு, என் நண்பன்,
அம்மாவின் புது கணவர், அப்படியாக நம்புகிறேன்.

918
00:50:09,927 --> 00:50:12,513
நாங்கள் எல்லாரும் மேற்கு நோக்கி
ஒரு புதிய ஜெட் விமானத்தில்.

919
00:50:12,596 --> 00:50:15,724
விஞ்ஞான ரீதியாக வாழ்க்கை இதை விட
சிறப்பாக இருக்க வாய்ப்பே இல்லை.

920
00:50:21,313 --> 00:50:24,024
ஹலோ. உங்களுக்கு சாட்டோபிரியான் வேணுமா?

921
00:50:25,192 --> 00:50:26,276
- இல்ல.
- இல்ல.

922
00:50:26,360 --> 00:50:27,611
உங்களுக்கு சிக்கன் பிடிக்குமா?

923
00:50:28,195 --> 00:50:29,321
பிடிக்காது.

924
00:50:29,404 --> 00:50:30,739
உனக்கு ஃப்ரைடு சிக்கன் பிடிக்காதா?

925
00:50:30,822 --> 00:50:32,199
எனக்கு ஃப்ரைடு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.

926
00:50:32,699 --> 00:50:34,868
ம், இது அது மாதிரி தான்.

927
00:50:34,952 --> 00:50:36,495
இது பேர் சிக்கன் கார்டான் ப்ளூ.

928
00:50:38,539 --> 00:50:42,793
ஆனால் எங்க ஜெட் ஃப்ளைட்கள்ல,
குழந்தைங்க மெனுவும் இருக்கு,

929
00:50:42,876 --> 00:50:45,879
ஹாட் டாக், ஹாம்பர்கர்,
அப்புறம் பீனட் பட்டர், ஜெல்லி சான்ட்விச்,

930
00:50:45,963 --> 00:50:47,965
இதில உனக்குப் பிடிச்சதைச் சொல்லலாம்.

931
00:50:48,757 --> 00:50:50,300
எனக்கு மஸ்டர்ட் சாஸோட ஹாட் டாக் வேணும்.

932
00:50:50,384 --> 00:50:53,053
எனக்கு மஸ்டர்ட் சாஸ், கெட்சப் இல்லாம
ஹாட்டாக்.

933
00:50:53,136 --> 00:50:54,304
கண்டிப்பா.

934
00:50:54,388 --> 00:50:55,848
எனக்கு மயக்கம் வருவது போல
இருந்தது.

935
00:50:55,931 --> 00:50:58,642
35,000 அடியில் ஹாட் டாக்கா?

936
00:50:58,725 --> 00:51:01,520
எனக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே வரவில்லை.

937
00:51:01,603 --> 00:51:03,981
ஆனால் எனக்கு ஒன்று சொல்ல வேண்டியிருந்தது,
அதனால் ஸ்கிப்பிடம் திரும்பினேன்.

938
00:51:04,064 --> 00:51:06,316
எனக்கு உன் அதிகாரப்பூர்வ ஏர்லைன் வழிகாட்டி
பிடிச்சிருக்கு.

939
00:51:06,400 --> 00:51:07,442
நன்றி.

940
00:51:09,611 --> 00:51:12,865
சூரியன் பிரகாசமாக,
வானம் பளிச்சென நீலமாக இருக்க,

941
00:51:12,948 --> 00:51:15,742
மணிக்கு 600 மைல் வேகத்தில்,
என்னுடைய புதிய சிறந்த நண்பனுடன்

942
00:51:15,826 --> 00:51:18,912
ஹாட் டாக் சாப்பிட்டுக்கொண்டு,
கோக் குடித்துக்கொண்டிருந்தேன்.

943
00:51:19,872 --> 00:51:23,208
அந்த தருணம் முதல், இதைவிட எதுவும்
சிறப்பாக நடக்காது என்று நினைத்தேன்.

944
00:51:42,936 --> 00:51:45,147
லாஸ் ஏஞ்சலஸ்

945
00:51:45,230 --> 00:51:46,607
எங்கள் விமானம் நகர்ந்து செல்கையில்,

946
00:51:46,690 --> 00:51:49,860
LAX-ல் புதிய அதி நவீன உணவகத்தைப்
என்னால் பார்க்க முடிந்தது.

947
00:51:50,485 --> 00:51:51,737
அது உண்மையில் அழகாக இருந்தது.

948
00:51:51,820 --> 00:51:54,156
அங்கு எப்போதாவது சாப்பிட வேண்டும்
என்று நினைத்துக் கொண்டேன்.

949
00:51:58,952 --> 00:52:00,579
ஜன்னலுக்கு வெளியே,

950
00:52:00,662 --> 00:52:04,124
எங்களது விமானத்துடன் இணைக்க
ஜெட்வே நகர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது.

951
00:52:10,756 --> 00:52:12,633
அம்மா, அங்க வெளிய சினிமா கேமராக்கள் இருக்கு.

952
00:52:13,217 --> 00:52:15,636
- விளையாடுறியா?
- இல்ல, உண்மையாகத் தான் சொல்றான்.

953
00:52:15,719 --> 00:52:17,262
- எதுக்கும் தயாரா இருக்கிறது நல்லது.
- ஆமா.

954
00:52:17,346 --> 00:52:19,014
ம், நீ பார்க்க அழகா இருக்க.

955
00:52:40,452 --> 00:52:42,162
அந்த கேமராக்கள் ஏன் வெளிய இருக்கு?

956
00:52:42,246 --> 00:52:43,705
அது எங்களது
ஜெட் விமானத்தின் கேப்டனுக்காக.

957
00:52:43,789 --> 00:52:46,500
அவருக்கு 62 வயது,
இது தான் அவருடைய கடைசி விமான பயணம்.

958
00:52:46,583 --> 00:52:48,043
டோரிஸ் உன்னைப் பத்தி எல்லாம் சொன்னா.

959
00:52:48,126 --> 00:52:49,711
- உன் பேர் ஜெஃப்பா?
- ஆமா.

960
00:52:49,795 --> 00:52:52,589
ஜெட்வே-ல என் கூட வரியா?

961
00:52:52,673 --> 00:52:55,592
"லைஃப் பத்திரிகை", அவரைக்
குறித்து ஒரு டிவி நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது.

962
00:53:02,182 --> 00:53:04,351
சரி, ஒரு கடைசிக் கேள்வி.

963
00:53:05,102 --> 00:53:07,104
இப்போது ஓய்வு பெற்றுள்ளதால் நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?

964
00:53:08,355 --> 00:53:11,567
ம், நான் போய் ஒப்படைக்கும் வரை,
நான் அதிகாரப்பூர்வமாக ரிடையர் ஆகல,

965
00:53:11,650 --> 00:53:15,612
ஆனால், ம், உங்கள் கேமராக்கள் முன்னால
என்னை ரிடையர் ஆக்குறதா இருந்தா…

966
00:53:17,155 --> 00:53:18,574
நான்…

967
00:53:19,449 --> 00:53:21,535
நான் என்னுடைய

968
00:53:22,202 --> 00:53:23,704
பேட்ஜை

969
00:53:24,955 --> 00:53:26,081
இந்த இளைஞனுக்குக் கொடுக்க விரும்புறேன்,

970
00:53:26,999 --> 00:53:28,292
இவன்…

971
00:53:31,044 --> 00:53:32,629
ரத்தத்தில விமானங்கள் ஊறி போயிருக்கு.

972
00:53:40,971 --> 00:53:43,557
அந்தத் தருணத்தை
என் வாழ்க்கையில் சீரியஸாக எடுத்துக்கொண்டேன்,

973
00:53:44,141 --> 00:53:46,185
இன்று நானே ஒரு கேப்டனாகிவிட்டேன்.

974
00:53:46,268 --> 00:53:49,813
அப்படியே டோரிஸை மணந்துகொண்டேன்,
இருந்தாலும் பிடிக்க வேண்டிய இடைவெளி இருக்கிறது.

975
00:53:50,314 --> 00:53:52,065
ஆம், பதிமூன்று வருடங்கள்.

976
00:53:52,149 --> 00:53:54,318
என்ன இருந்தாலும், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

977
00:53:54,401 --> 00:53:56,320
முழு அளவிலான ஒரு விமான ஜோடி.

978
00:53:56,820 --> 00:53:59,781
உண்மையில்,
அவளை நான் தினமும் பார்க்கிறேன்.

979
00:54:00,616 --> 00:54:04,620
அவள் தான் இப்போது JFK-ன் புதிய குரல்,
நான் நியூ யார்க், LA வழிதடத்தில் பணியாற்றுகிறேன்.

980
00:54:04,703 --> 00:54:06,079
மிகவும் சௌகரியம் தான்.

981
00:54:06,163 --> 00:54:07,164
ஆமாம்.

982
00:54:07,247 --> 00:54:10,667
என் அம்மாவைப் பற்றி கேட்கிறீர்களா? அவள்
ஸ்கிப்பரின் அப்பாவை திருமணம் செய்துகொள்ளவே இல்லை,

983
00:54:10,751 --> 00:54:12,753
ஆனால் சிறிது காலம் அவரை டேட் செய்தாள்.

984
00:54:12,836 --> 00:54:14,546
அது வேலை செய்யும் என்று நாங்கள் எல்லோரும்
நடித்தோம்.

985
00:54:14,630 --> 00:54:15,714
எப்படியோ அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

986
00:54:16,298 --> 00:54:19,259
கலிஃபோர்னியாவில், பாஸடீனா ப்ளேஹவுஸில்
அவள் நடிப்பு கற்றுக்கொடுக்கிறாள்.

987
00:54:19,801 --> 00:54:22,846
இப்போது அவளுக்கு 80 வயது,
இளம் வயதினருடன் உற்சாகமாக இருக்கிறாள்.

988
00:54:23,555 --> 00:54:27,351
பிறகு லிஸ் அவளுக்குப் பிடித்த மாணவி,
ஏறக்குறைய 20 வருடங்களாக மாணவி.

989
00:54:28,185 --> 00:54:29,561
இது அற்புதமான வாழ்க்கையாக இருந்துள்ளது.

990
00:54:33,440 --> 00:54:35,150
இந்த திரைப்படமானது
என் வாழ்க்கையின் உத்வேகமாக இருக்கும்

991
00:54:35,234 --> 00:54:36,568
கெல்லி

992
00:54:36,652 --> 00:54:37,945
ஜெட்

993
00:54:38,028 --> 00:54:39,363
பென்

994
00:54:39,446 --> 00:54:40,739
மற்றும் எல்லா

995
00:54:40,822 --> 00:54:42,449
என் அம்மா, அப்பா

996
00:54:42,533 --> 00:54:44,326
என் சகோதரர்கள், சகோதரிகள்

997
00:54:44,409 --> 00:54:48,413
ஆகியோருக்கு சமர்ப்பணம்!

998
00:55:18,068 --> 00:55:21,071
வர்ணனையாளர்
ஜான் டிரவோல்டா

999
00:59:53,093 --> 00:59:54,928
இது ஒரு கற்பனை படைப்பு.

1000
00:59:55,012 --> 00:59:57,264
உயிருள்ள அல்லது இறந்து போன
நிஜ மனிதர்கள்,

1001
00:59:57,347 --> 00:59:59,683
அல்லது நிஜ நிகழ்வுகளுடன்
ஒப்புமை இருப்பின்

1002
00:59:59,766 --> 01:00:01,810
அது முற்றிலும் தற்செயலானதே.

1003
01:00:09,318 --> 01:00:11,236
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்



